ஜல்லிகட்டு போன்றே இதையும் சாதித்து காட்டுவோம்: விஜய்சேதுபதி

  • IndiaGlitz, [Thursday,May 24 2018]

தமிழகத்தில் நடந்த பல போராட்டங்களில் வெற்றி பெற்ற ஒரே போராட்டம் உலக அளவில் கவனத்தை பெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் தான் என்றால் அது மிகையாகாது. காரணம் அந்த போராட்டத்தில் எந்த அரசியல் கட்சி தலைவர்களையும் போராட்டக்காரர்கள் அனுமதிக்கவில்லை.

அதேபோல் கடந்த 100 நாட்களுக்கும் மேல் அமைதியான வழியில் போராடி வந்த ஸ்டெர்லைட் போராட்டம் கடந்த மூன்று நாட்களில் வன்முறையாக மாறி 13 பேர் உயிரிழப்பிற்கும் காரணமாகிவிட்டது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போன்றே இந்த போராட்டத்தையும் சாதித்து காட்டுவோம் என நடிகர் விஜய்சேதுபதி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

தூத்துகுடியில் ஒவ்வொரு காட்சியும் மனதை அலற வைக்கின்றது. தயவு செய்து சிலர்களின் பேச்சை கேட்டு தப்பான வழியில் செல்லாமல் ஜல்லிகட்டு போன்றே இதையும் சாதித்து காட்டுவோம். தயவுசெய்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். போலீஸார் நீதியுடன் நடந்துகொள்ள வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

இந்த போராட்டத்தை வைத்து விளம்பரம் தேடும் ஒருசில அரசியல்வாதிகளை இனம்கண்டு அவர்களை இந்த போராட்டத்தில் இருந்து ஒதுக்கினாலே இந்த போராட்டமும் ஜல்லிக்கட்டு போன்றே வெற்றியடையும் என்றும் அந்த வெற்றிக்கு முழு பொருப்பும் அந்த பகுதி மக்களையே சேரும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

More News

பெங்களூர் வரை பரவியது ஸ்டெர்லைட் போராட்டம்

தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் கடந்த பல ஆண்டுகளாக காவிரி பிரச்சனை இருந்தாலும் தமிழகத்தில் நடைபெற்று வரும் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு பெங்களூர் மக்கள் ஆதரவு கொடுத்துள்ளது

தலைமை செயலகத்தில் தர்ணா: மு.க.ஸ்டாலின் கைது

தூத்துகுடியில் கடந்த மூன்று நாட்களாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அந்த பகுதி மக்கள் பெரும் துயரத்தில் உள்ள நிலையில் இன்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகம் சென்றார்.

ஸ்டெர்லைட்டுக்கும், பாஜகவுக்கும் சம்பந்தமில்லை: தமிழிசை

தூத்துகுடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் காரணமாக மூன்றாவது நாளாக இன்றும் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது

தூத்துகுடி செய்தியை ஒளிபரப்பிய அல் ஜசீரா தொலைக்காட்சி

தமிழகத்தின் தென்கோடியில் உள்ள தூத்துகுடி மக்களின் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான 100 நாட்கள் போராட்டத்தை வட இந்திய ஊடகங்களே இதுவரை கண்டுகொள்ளமல் இருந்த நிலையில்

சரித்திரம் காணாத  புரட்சி  வெடிக்கும்.  இண்டர்நெட் துண்டிப்பு குறித்து கமல்

தூத்துகுடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நேற்று முன் தினம் மற்றும் நேற்று ஏற்பட்ட வன்முறையால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர்.