close
Choose your channels

பரத் நடிக்கும் அடுத்த படத்திற்கு உதவிய விஜய்சேதுபதி

Thursday, December 13, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படத்தில் அறிமுகமான நடிகர் பரத் அதன்பின்னர் 'காதல்', 'எம் மகன்', 'வெயில்', 'கண்டேன் காதலை' உள்பட பல படங்களில் நடித்துள்ளார். அவர் தற்போது 'பொட்டு', 'சிம்பா', 'காளிதாஸ்' உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் பரத் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார். 'நடுவன்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை விஜய்சேதுபதி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, படக்குழுவினர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

பரத் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தை ஷரங் இயக்கவுள்ளார். யுவா ஒளிப்பதிவில் தரண் இசையில் சன்னி சாரவ் படத்தொகுப்பில் சசிகுமார் கலை இயக்கத்தில் விக்கி சண்டைப்பயிற்சியில் இந்த படம் உருவாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.