close
Choose your channels

'மாஸ்டர்', 'பீஸ்ட்' பாணியை 'வாரிசு' படத்திலும் தொடரும் விஜய்: ரசிகர்கள் உற்சாகம்!

Sunday, July 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த ’மாஸ்டர்’, ‘பீஸ்ட்’ உள்பட பல படங்களில் தொடரும் பாணியை ‘வாரிசு’ படத்திலும் தொடரயிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்து வருகிறது.

நடிகர் விஜய் தான் நடித்து வரும் பெரும்பாலான படங்களில் ஒரு பாடலை பாடும் வழக்கத்தை கொண்டுள்ளார். ‘ரசிகன்’ என்ற படத்தில் முதன்முதலாக பாடத் தொடங்கிய விஜய் அதன் பின் தொடர்ச்சியாக பல படங்களில் ஒரு பாடலை பாடி வருகிறார் என்பதும் சமீபத்தில் வெளியான ’மாஸ்டர்’, ‘பீஸ்ட்’ படங்களிலும் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படத்திலும் அவர் தமன் இசையில் விவேக் பாடல் வரிகளில் உருவான ஒரு பாடலை பாட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘வாரிசு’ திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆந்திராவில் நேற்று தொடங்கியுள்ளதாகவும் இந்த படப்பிடிப்பில் விஜய் விரைவில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.