ரசிகர்களுக்கு இளையதளபதி தரும் டபுள் ட்ரீட்

  • IndiaGlitz, [Sunday,August 16 2015]

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'புலி' திரைப்படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என்பது உறுதியாகியுள்ள நிலையில் விஜய்யின் அடுத்த படமான 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை ஈசிஆர் சாலையில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பை கோவாவில் விரைவில் இயக்குனர் அட்லி ஆரம்பிக்க உள்ளதாகவும் அதனை அடுத்து படக்குழுவினர் சீனா செல்லவுள்ளதாகவும் ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

இந்நிலையில் இந்த படத்தில் 'உலக தர லோக்கல்' பாடல் ஒன்றை விஜய் பாடவுள்ளதாக சமீபத்தில் பார்த்தோம். தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி விஜய் இந்த படத்தில் இரண்டு பாடல்களை பாடவுள்ளதாகவும், ஜி.வி.பிரகாஷ்குமார் கம்போஸ் செய்த இந்த இரண்டு பாடல்களையும் விஜய் பாடினால் மட்டுமே மிகப்பொருத்தமாக இருக்கும் என்று கருதியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. எனவே விஜய் ரசிகர்களுக்கு இந்த படத்தில் டபுள் ட்ரீக் காத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், சமந்தா, எமி ஜாக்சன், ராதிகா சரத்குமார், கே.எஸ்.ரவிகுமார், இயக்குனர் மகேந்திரன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். இந்த படம் 2016ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'புலி' டப்பிங்கை தொடங்கினார் ஸ்ருதிஹாசன்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'புலி' படத்தின் டிரைலர் வரும் 20ஆம் தேதி வியாழக்கிழமை வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் டப்பிங் பேசும் பணிகள் ஆரம்பமாகிவிட்டதாகவும், முதல்கட்டமாக ஸ்ருதிஹாசன் டப்பிங் பேசி வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது....

த்ரிஷா நடிக்கும் முதல் மலையாள படத்தில் சூப்பர் ஸ்டார்?

கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஏராளமான ஹிட் கொடுத்த நடிகை த்ரிஷா...

மணிரத்னத்தின் 3 மாத திட்டம்

சமீபத்தில் சூப்பர் ஹிட்டான 'ஓகே கண்மணி'யை அடுத்து மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்தபடத்தின் திரைக்கதை தயாராகிவிட்டது என்றும்...

பாகுபலி வழியில் 'ருத்ரம்மாதேவி'

இந்திய திரையுலகில் பல சாதனைகள் படைத்த 'பாகுபலி' திரைப்படம் இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் வெற்றி நடை போட்டு வசூலை..

'புலி' டிரைலரின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் முடிந்தது.

இளையதளபதி விஜய் நடித்துள்ள புலி' படத்தின் டிரைலர் வரும் 20ஆம் தேதி வெளிவரும் என விஜய்யே தனது சமூக வலைத்தளத்தில் ..