சூர்யாவுக்காக ஒரே படத்தில் மூன்று பாடல்கள் பாடிய விஜய்!

  • IndiaGlitz, [Saturday,June 13 2020]

தளபதி விஜய் அவர்கள் ஒரு மிகச்சிறந்த நடிகர், டான்சர் மட்டுமன்றி சிறந்த பாடகர் என்பதும் அனைவரும் அறிந்ததே. அவர் தான் நடித்து வரும் ஒவ்வொரு படத்திலும் குறைந்தது ஒரு பாடலாவது சமீபகாலமாக பாடி வருகிறார் என்பதும் தெரிந்ததே. தற்போது உருவாகி ரிலீசுக்கு தயாராக இருக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் ’குட்டி ஸ்டோரி’ என்ற பாடலை பாடியுள்ளார் என்பதும் இந்த பாடல் உலகம் முழுவதும் வைரலாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது சமகால நடிகரான சூர்யாவுக்கு ஒரே படத்தில் மூன்று பாடல்கள் விஜய் பாடியுள்ளார் என்ற தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. விஜயகாந்த் உடன் சூர்யா நடித்த திரைப்படம் ’பெரியண்ணா’. இந்த படத்தை விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் இயக்கியுள்ளார். இந்த படத்தில் மொத்தம் 8 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ’பார்வை ஒன்றே போதுமே’ படத்திற்கு இசையமைத்த பரணி இசையமைத்த இந்த படத்தில் எஸ் பி பாலசுப்பிரமணியன் இரண்டு பாடல்களும் மலேசியா வாசுதேவன், ஹரிஹரன் மற்றும் எஸ்.என்.சுரேந்தர் ஆகியோர் தலா ஒரு பாடல்களையும் பாடியுள்ளனர். மீதி மூன்று பாடல்களையும் சூர்யாவுக்காக விஜய் பாடியுள்ளார் என்பதும் இதில் இரண்டு பாடல்கள் தனியாகவும் ஒரு பாடலை ஸ்வர்ணலதாவுடன் இணைந்து பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

பெரியண்ணா படம் உருவானபோது விஜய் ஒரே நேரத்தில் நான்கு படங்கள் நடித்து பிசியாக இருந்தார். இருப்பினும் விஜய் தான் நடிக்காத படத்தில் சூர்யாவுக்காக 3 பாடல்களை தனது பிசியான ஷெட்யூலிலும் பாடிக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

11ஆம் தேதி மருத்துவர் குழு, 17ஆம் தேதி பிரதமர்: அடுத்தடுத்து ஆலோசனை செய்யும் முதல்வர்

தமிழகத்தில் குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த

'பேட்ட' படத்தில் நடிக்க வேண்டாம் என கூறினார்கள்: மாளவிகா மோகனன் அதிர்ச்சி தகவல்

தனக்கு மிகவும் நெருக்கமான பலர் 'பேட்ட' படத்தில் நடிக்க வேண்டாம் என்று கூறியதாகவும் ஆனால் நான் அவர்களின் பேச்சைக் கேட்காமல் 'பேட்ட' படத்தில் நடித்ததாகவும் மாளவிகா மோகனன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் 

சூப்பர் ஹிட் படத்தின் ஸ்கிரிப்டை 7 நாட்களில் எழுதி முடித்த கமல்ஹாசன்: ஆச்சரிய தகவல் 

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் நேற்று இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானுடன் சமூக வலைத்தளம் மூலம் உரையாடினார் என்ற செய்தி அனைவரும் தெரிந்ததே.

போலியோ தடுப்பு மருந்து: கொரோனாவைத் தடுக்க பயன்படுமா??? விஞ்ஞானிகளின் புது நம்பிக்கை!!!

“காசநோய் தடுப்பூசி (பிசிஜி) அதிகம் பயன்படுத்தப்பட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கிறது”

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் கலர் கலரான ஸ்வீட் அறிமுகம்!!!

கொரோனா நோய்த்தொற்று உலகையே புரட்டி போட்ட நிலையில் அதில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நடவடிக்கைகளை ஒவ்வொரு தனிமனிதனும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு இருக்கிறோம்.