தோழிகளுடன் காருக்குள் டான்ஸ் ஆடும் விஜய் மகன் சஞ்சய்: வைரல் வீடியோ!

தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் மற்றும் செய்திகள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சஞ்சய் காரில் சென்று கொண்டிருந்த போது எடுத்த வீடியோ ஒன்றும், தனது நண்பர்களுடன் செல்பி எடுத்த புகைப்படம் ஒன்றும் வைரல் ஆனது.

இந்த நிலையில் தற்போது விஜய் மகன் சஞ்சய் தனது நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் காரில் டான்ஸ் ஆடும் காட்சிகள் உள்ள வீடியோ வைரலாகிறது. தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற தீம் மியூசிக்கிற்கு சஞ்சய்யும் அவரது நண்பர்களும்ஆடுவது போன்ற சில காட்சிகளும் சாலையில் நின்று ஆடுவது போன்று சில காட்சிகளும் உள்ளன. ஜாலியாக எந்தவித இடையூறுமின்றி விஜய் மகன் சஞ்சய் அவரது நண்பர்களும் டான்ஸ் ஆடும் வீடியோவை விஜய் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

விஜய் மகன் சஞ்சய் விரைவில் இயக்குனர் அல்லது நடிகராக தமிழ் திரையுலகில் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவருடைய வீடியோக்களும் புகைப்படங்களும் அடிக்கடி சமூகவலைதளத்தில் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

நயன்தாராவின் 'நெற்றிக்கண்' படத்தின் முக்கிய அப்டேட்: ரசிகர்கள் குஷி

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'நெற்றிக்கண்' திரைப்படத்தின் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகும் என ஏற்கனவே இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்த

பெண் காவலரை அசிங்கமாக பேசிய ட்ரைவர்....! கேஸ் போட்டு தூக்கிய போலீஸ்...!

பெண் எஸ்-ஐ  கிருத்திகாவை  தகாத வார்த்தைகளால் பேசிய ஆட்டோ ட்ரைவர் மீது,  5 வழக்குகள் போடப்பட்டுள்ளது.

குழந்தை பெத்துக்காமலேயே எத்தனை குழந்தைகள்: ஷகிலா நெகிழ்ச்சி

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முன்னர் ஷகிலா என்றால் அனைவருக்கும் அவர் ஒரு கவர்ச்சி நடிகை என்றும் அவர் நடித்த கவர்ச்சி திரைப்படங்கள் மட்டுமே ஞாபகம் வரும்.

100 பேருக்கு இல்லையென்றாலும் ஒருவருக்காவது செய்யுங்கள்: பிரபல நடிகையின் வீடியோ!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல லட்சக்கணக்கான குடும்பங்கள் வேலையின்றி வருமானமின்றி பசியும் பட்டினியுமாக இருக்கும் நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் பிரபல நடிகை

கொரோனா பாதிப்பு இறங்கியுள்ளது...! நிலவரம் கூறுவது என்ன...?

இந்தியாவில் கொரோனா பாதிப்பு என்பது கிட்டத்தட்ட 63 நாட்களுக்குப்பிறகு, 1 லட்சத்துக்கும் குறைந்துள்ளது.