close
Choose your channels

பிகில்: விஜய் பதிவு செய்த ஒரு வார்த்தை டுவிட்டுக்கு குவியும் லைக்ஸ்கள்

Wednesday, October 23, 2019 • தமிழ் Comments

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் வரும் 25ஆம் தேதி முதல் வெளியாகவுள்ளது. வெளிநாடுகளில் நாளையே பிரிமியர் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் முழுவீச்சில் உச்சகட்டமாக நடைபெற்று வருகிறது. இதனால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு, ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க அதிகரித்து கொண்டு வருவதோடு ரசிகர்களின் பல்ஸ் ரேட்டையும் ஏற்றி வருகிறது

இந்த நிலையில் தளபதி விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் #Bigil என்ற ஒரே ஒரு வார்த்தையை மட்டும் ஹேஷ்டேக்காக பதிவு செய்து அதன் அருகில் பிகில் எமோஜி ஒன்றையும் பதிவு செய்துள்ளார். இந்த ஒரு வார்த்தை டுவீட் பதிவு செய்த ஒருசில நிமிடங்களில் ஆயிரக்கணக்கில் லைக்ஸ்களும் ரீடுவீட்டுகளும் குவிந்து வருகிறது. இதேரீதியில் சென்றால் இன்னும் ஒருசில மணி நேரங்களில் லைக்ஸ்கள் மில்லியனை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது

Get Breaking News Alerts From IndiaGlitz