வனிதா விஜயகுமார் வீட்டுக்கு மனைவியுடன் சென்று சர்ப்ரைஸ் அளித்த தளபதி விஜய்

தளபதி விஜய்யின் பிறந்த நாள் சமீபத்தில் அவரது ரசிகர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில்
நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான வனிதா விஜயகுமார் வீட்டிற்கு சென்று விஜய் சர்ப்ரைஸ் அளித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

தளபதி விஜய் நடித்த சந்திரலேகா என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானவர் வனிதா என்பது தெரிந்ததே 1995ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தின் போது விஜய்க்கும் வனிதாவுக்கு நல்ல நட்பு ஏற்பட்டது. இந்த படத்திற்கு பின் இருவரும் இணைந்து நடிக்கவில்லை என்றாலும் இந்த நட்பு இன்று வரை இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் தளபதி விஜய்யின் பிறந்தநாள் குறித்து திரையுலக பிரமுகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களையும் விஜய்யுடன் பழகிய நாட்களையும் கூறி வந்த நிலையில் தன்னுடைய பங்கிற்கு தான் விஜய்யுடன் எடுத்துக் கொண்ட ஒரு அரிய புகைப்படத்தை பதிவு செய்த வனிதா விஜயகுமார், தனது மலரும் நினைவுகளை கூறியுள்ளார்

தனது மகன் ஸ்ரீஹரி பிறந்த நாளை சரியாக ஞாபகம் வைத்து விஜய் தனது வீட்டிற்கு மனைவியுடன் வந்து அவனை வாழ்த்தியது குறித்து வனிதா குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய மகன் ஸ்ரீஹரி பிறந்த நாளுக்கு விஜய் வாழ்த்துக் கூற தனது வீட்டிற்கு வந்த போது தனது தாயார் மஞ்சுளா விஜயகுமாரும் உடன் இருந்ததையும் அவர் தெரிவித்துள்ளார்.

விஜய் தனது வீட்டிற்கு வந்து தனது மகனுக்கு வாழ்த்து தெரிவித்த நாளை தன்னால் மறக்க முடியாது என்றும் வனிதா கூறியுள்ளார். வனிதா விஜயகுமார் தனது சமூக வலைத்தளத்தில் வெளீயிட்ட இந்த அரிய புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

View this post on Instagram

Vijaysrihari first birthday with #thalapathy

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on Jun 23, 2020 at 6:46am PDT

More News

காசியால் பாதிக்கப்பட்ட பெண்களை தனி ரூட் போட்டு மயக்கிய நண்பர்: அதிர்ச்சி தகவல்

பள்ளி மாணவிகள் முதல் நடுத்தர வயது குடும்ப பெண்கள் வரை நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை சீரழித்த நாகர்கோவில் காசி தற்போது கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார்.

திருமணத்திற்கு முந்தைய நாள் மணப்பெண் கொலை: டிக்டாக் ஸ்டாரின் வெறிச்செயல்

திருமணத்திற்கு முந்தைய நாள் இரவில் மணமகளை வெறித்தனமாக கொலை செய்த டிக்டாக் ஸ்டார் ஒருவரால் உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

2500ஐ தாண்டினாலும் நேற்றை விட குறைவு: தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் பாதிப்பு தினமும் இரண்டாயிரத்தை தாண்டியது என்பதும் குறிப்பாக நேற்று 2710 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு என்றும் வெளிவந்த

ஏர் இந்திய விமானங்களுக்கு அமெரிக்காவில் தடை: புதிய சிக்கலில் மாட்டிக்கொண்ட அமெரிக்கா வாழ் இந்தியர்கள்!!!

கொரோனா பரவல் ஆரம்பித்ததில் இருந்தே அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் அடுக்கடுக்கான பிரச்சனையை சந்தித்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சுக்கு கொரோனா பாதிப்பு: மனைவிக்கும் பரவியதாக தகவல் 

பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது