close
Choose your channels

நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் இணைந்த ரக்சன் - ஜாக்குலின்.. என்ன ஒரு ஆட்டம்..!

Tuesday, April 2, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவி ரக்சன் மற்றும் ஜாக்லின் ஆகிய இருவரும் ‘கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியை இணைந்து தொகுத்து வழங்கிய நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒரு நிகழ்ச்சியில் இருவரும் செம டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சி ’கலக்கப்போவது யாரு’ என்பதும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் தான் பின்னாளில் தொலைக்காட்சியிலும் திரையுலகிலும் பிரபலமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படிப்பட்ட புகழ் வாய்ந்த இந்த நிகழ்ச்சியை ரக்சன் மற்றும் ஜாக்லின் இணைந்து சில சீசன்களை தொகுத்து வழங்கினர் என்பதும் இவர்கள் இருவரும் தொகுத்து வழங்கிய சீசன்கள் சூப்பராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ரக்சன் மற்றும் ஜாக்லின் கெமிஸ்ட்ரி இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணமாக இருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் இணைந்து எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காத நிலையில் தற்போது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். ரக்சன் மற்றும் ஜாக்லின் ஆகிய இருவருமே சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் அந்த நிகழ்ச்சியில் அவர்கள் பார்வையாளர்கள் முன்னிலையில் செம ஆட்டம் ஆடிய வீடியோ ஜாக்குலின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.