பாகுபலி'யுடன் கனெக்ஷன் ஆகும் விஜய்யின் 'தெறி'

  • IndiaGlitz, [Thursday,November 26 2015]

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று சமூக வலைத்தளங்களில் தெறிக்க வைத்தது என்பதை அனைவரும் பார்த்தோம். இந்நிலையில் இந்த படம் அதிரடி ஆக்சன் படம் என்பதால் இயக்குனர் அட்லி சண்டைக்காட்சிகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுத்து படப்பிடிப்பு நடத்தி வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.


இந்நிலையில் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆன 'பாகுபலி' படத்திற்கு சண்டைப்பயிற்சி செய்த Kaloian Vodenicharov என்பவர் 'தெறி' படத்தின் ஒரு அதிரடி சண்டைக்காட்சியை அமைத்து வருவதாகவும், இந்த சண்டைக்காட்சிகள் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

தற்போது கோவாவில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் 'தெறி' படத்தில் விஜய், சமந்தா, எமிஜாக்சன், கே.எஸ்.ரவிகுமார், ராதிகா சரத்குமார், சத்யராஜ், இயக்குனர் மகேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து வரும் இந்த படத்திற்கு கலைப்புலி எஸ்.தாணு பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்.

More News

ரஜினியுடன் இணைந்தார் த்ரிஷா?

சுந்தர் சி இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான 'அரண்மனை' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது...

சூப்பர் ஸ்டார் டைட்டிலில் விஷ்ணுவிஷால்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படங்களின் டைட்டில்களில் கோலிவுட்டில் பல படங்கள் உருவாகி வருகிறது. குரு சிஷ்யன், படிக்காதவன்...

சிம்புவுடன் நடிப்பது ரொம்ப கஷ்டம். நடிகை மஞ்சிமா

'என்னை அறிந்தால்' வெற்றி படத்திற்கு பின்னர் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கி வரும் திரைப்படம் 'அச்சம் என்பது மடமையடா'...

அஜித்-விஜய் படங்களின் ஒற்றுமை: ஒரு சுவாரஸ்ய அலசல்

இன்று தமிழ்த் திரையுலகில் இரண்டு மிக முக்கியமான ஆளுமைகள் என்றால் அஜித் மற்றும் விஜய் என்று தமிழர்கள் மட்டுமல்ல சமூக வலைதளங்களில் உள்ள அனைவருமே...

'தெறி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கூறும் முக்கிய தகவல்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 59வது படமான 'தெறி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதை அனைவரும் அறிவோம்...