close
Choose your channels

பாகுபலி'யுடன் கனெக்ஷன் ஆகும் விஜய்யின் 'தெறி'

Thursday, November 26, 2015 • தமிழ் Comments

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று சமூக வலைத்தளங்களில் தெறிக்க வைத்தது என்பதை அனைவரும் பார்த்தோம். இந்நிலையில் இந்த படம் அதிரடி ஆக்சன் படம் என்பதால் இயக்குனர் அட்லி சண்டைக்காட்சிகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுத்து படப்பிடிப்பு நடத்தி வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

 


இந்நிலையில் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆன 'பாகுபலி' படத்திற்கு சண்டைப்பயிற்சி செய்த  Kaloian Vodenicharov என்பவர் 'தெறி' படத்தின் ஒரு அதிரடி சண்டைக்காட்சியை அமைத்து வருவதாகவும், இந்த சண்டைக்காட்சிகள் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

தற்போது கோவாவில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் 'தெறி' படத்தில் விஜய், சமந்தா, எமிஜாக்சன், கே.எஸ்.ரவிகுமார், ராதிகா சரத்குமார், சத்யராஜ், இயக்குனர் மகேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து வரும் இந்த படத்திற்கு கலைப்புலி எஸ்.தாணு பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்.