கேரளாவில் அசைக்க முடியாத நம்பர் ஒன் இடத்தில் விஜய்

  • IndiaGlitz, [Monday,September 19 2016]

இளையதளபதி விஜய்க்கு தமிழகத்தை போலவே கேரளாவிலும் பெருமளவில் ரசிகர்கள் உள்ளனர் என்பதும் ஒரிஜினல் மலையாள படங்களையே விஞ்சும் அளவுக்கு அவருடைய படங்கள் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது என்பதும் தெரிந்ததே.
இந்நிலையில் கேரளாவில் இதுவரை அதிக வசூல் செய்த தமிழ் படங்கள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. விஜய்யின் 'தெறி' கேரளாவில் ரூ.16.50 கோடி வசூல் செய்து அசைக்க முடியாத நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் ரஜினியின் 'கபாலி ரூ.16.10 கோடியும், மூன்றாவது இடத்தில் உள்ள சூர்யாவின் '24' ரூ.10.35 கோடியும் வசூல் செய்துள்ளது.
சமீபத்தில் வெளியான விக்ரமின் 'இருமுகன்' திரைப்படம் இதுவரை கேரளாவில் ரூ.5.37 கோடி வசூல் செய்து இன்னும் பல திரையரங்குகளில் வெற்றி நடை போடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தென்னாப்பிரிக்காவில் டூயட் பாடும் விஜய்சேதுபதி

கோலிவுட் திரையுலகில் பிசியான ஹீரோக்களில் ஒருவரான விஜய்சேதுபதியின் 'தர்மதுரை' சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் அவர் நடித்து முடித்துள்ள 'ஆண்டவன் கட்டளை' மற்றும் 'றெக்க'...

ரஜினியை அடுத்து என்னை கவர்ந்த நடிகர். தோனி

கிரிக்கெட் தல என்று அழைக்கப்படும் தோனி நேற்று நடைபெற்ற TNPL கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தின்போது கோலிவுட்டில்...

சீயான் விக்ரமின் 'இருமுகன்'. சென்னை வசூல் நிலவரம்

சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த 8ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான 'இருமுகன்' திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது....

சூர்யாவின் 'சிங்கம் 3' அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி

சிங்கம், சிங்கம் 2 ஆகிய படங்களின் வெற்றிகளை அடுத்து ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் 'எஸ் 3'. சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது...

'பைரவா' படத்தில் டான்ஸ் ஆடும் 'பாபநாசம்' நடிகர்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் தயாரிக்கும் பணி தொடங்கிவிட்டதாகவும் மிக விரைவில் இதுகுறித்த தேதி வெளியாகும் என்பதையும் பார்த்தோம்.