'கேப்டன் மில்லர்' 'அயலான்' முதல் நாள் வசூலை நெருங்கிய 'கில்லி'.. ரீரிலீசில் சாதனை..!

  • IndiaGlitz, [Sunday,April 21 2024]

தளபதி விஜய் மற்றும் த்ரிஷா நடிப்பில் தரணி இயக்கத்தில் உருவான ’கில்லி’ திரைப்படம் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 20 ஆண்டுகளுக்கு முன்பே 50 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்த படம் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் தற்போது ரீமாஸ்டர் செய்யப்பட்டு புத்தம் புது பொலிவுடன் சமீபத்தில் ’கில்லி’ திரைப்படம் ரிலீசான நிலையில் இந்த ஆண்டு வெளியான புதிய திரைப்படங்களுக்கு இணையாக ஓப்பனிங் வசூல் செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஆண்டு வெளியான தனுஷின் ’கேப்டன் மில்லர்’ திரைப்படம் முதல் நாளில் ரூ.9 கோடி வசூலித்ததாக கூறப்பட்டது. அதேபோல் சிவகார்த்திகேயன் நடித்த ’அயலான்’ திரைப்படம் முதல் நாளில் ரூ.8 கோடி வசூல் செய்ததாகவும் தகவல் வெளியாகின. இந்த நிலையில் ’கில்லி’ படத்தின் முதல் நாள் வசூல் கிட்டத்தட்ட 7 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படும் நிலையில் புதிய திரைப்படங்களின் வசூலுக்கு இணையாக ரீரிலீஸ் படம் வசூல் செய்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி சென்னை கமலா தியேட்டரில் அடுத்த வாரம் சனி ஞாயிறு வரை இரண்டு தியேட்டர்களிலும் ஹவுஸ்புல் ஆகிவிட்டதாக அந்த திரையரங்கு உரிமையாளர் பேட்டி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

20 ஆண்டுகளுக்கு முன்பு ரிலீசான ஒரு திரைப்படம் மீண்டும் ரீரிலீஸ் ஆகி இந்த ஆண்டு ரிலீஸ் ஆன புதிய படங்களுக்கு இணையாக வசூல் செய்துள்ளது என்றால் அது நிச்சயம் தளபதி விஜய்யின் மாஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

சல்மான்கான் - ஏஆர் முருகதாஸ் படத்தில் இணைகிறாரா ஷங்கர் பட நாயகி? அப்ப த்ரிஷா என்ன ஆச்சு?

பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'எஸ்கே 23'  படத்தை இயக்கி வரும் நிலையில் அடுத்ததாக அவர் சல்மான் கான் படத்தை இயக்க இருக்கிறார்

விக்ரமின் 'வீர தீர சூரன்' படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்.. பான் இந்திய திரைப்படமா?

விக்ரம் நடிப்பில் அருண்குமார் இயக்கத்தில் உருவாக உள்ள 'வீர தீர சூரன்' என்ற படத்தின் மூன்று நிமிட வீடியோ சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த வீடியோ வைரலான நிலையில் படத்தின்

'தலைவர் 171' படத்தின் கதை இதுதான்.. கன்பர்ம்.. சன் பிக்சர்ஸ் வெளியிட்ட வீடியோ..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'தலைவர் 171' திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது

இதைவிட சிறப்பாக சொல்ல முடியாது: 'கில்லி' ரீ ரிலீஸ் குறித்து கவிதை வடிவில் சொன்ன த்ரிஷா..

விஜய் நடித்த 'கில்லி' திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் இந்த படம் குறித்து நடிகை த்ரிஷா தனது சமூக வலைதளத்தில் கவிதை வடிவில் சொன்ன பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

நாம் வாழ்வது இந்தியாவிலா? அல்லது பாகிஸ்தானிலா? பிரபல நடிகையின் ஆதங்க பதிவு..!

பிரபல நடிகை தங்களுக்கு நேர்ந்த ஒரு கொடூரமான சம்பவத்தை பதிவு செய்து நாம் வாழ்வது இந்தியாவிலா? அல்லது பாகிஸ்தானிலா? என ஆதங்கமாக பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.