விஜய் டிவியால் பலமுறை ஏமாந்தேன்: யாஷிகா வெளியேற்றம் குறித்து ஸ்ரீபிரியா

  • IndiaGlitz, [Monday,September 24 2018]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிலையில் அவருடைய கட்சியின் முக்கிய நிர்வாகியும், நடிகையுமான ஸ்ரீப்ரியா, யாஷிகா வெளியேற்றம் தனக்கு அதிருப்தியை அளித்ததாக கூறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று பாலாஜி மற்றும் யாஷிகா வெளியேற்றப்பட்டனர். நான்காவது வாரத்தில் இருந்தே வெளியேற்றப்பட வேண்டிய ஐஸ்வர்யாவை கடைசி வரும் காப்பாற்றும் நோக்கில் ஒவ்வொரு வாரமும் ஒருவரை பலிகடா ஆக்கி வரும் பிக்பாஸ், இந்த வாரம் யாஷிகாவை பலிகடாவாக்கிவிட்டதாக நெட்டிசன்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் யாஷிகாவின் வெளியேற்றம் தனக்கு தனக்கு அதிருப்தியை அளித்ததாகவும், இதை தான் எதிர்பார்க்கவில்லை என்றும், அவருக்கு நல்ல எதிர்காலம் கிடைக்க வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மட்டுமின்றி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் சத்யபிரகாஷ் மற்றும் ஸ்ரீகாந்த் டைட்டில் பட்டத்தை வெல்லாதது தனக்கு ஏமாற்றம் அளித்ததாக ஸ்ரீப்ரியா கூறியுள்ளார்.

 

More News

அஜித், விஜய் பிறந்த நாளில் வீட்டை பூட்டிவிட்டு ஓடுகிறோம்: நடிகை கஸ்தூரி

சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் பிறந்த நாளில் அவர்களது ரசிகர்களும் தொண்டர்களும் ஒலிபெருக்கியில் பாடல்களை ஒலிக்க வைத்து ஒலிமாசு ஏற்படுத்துவதாக ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

மீண்டும் ஒரு குஜராத்தி தப்பியோட்டம்: நடிகர் சித்தார்த் காட்டம்

வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடி கடன் பெற்றுவிட்டு இந்தியாவில் இருந்து தப்பி வெளிநாடுகளுக்கு ஓடிவிடும் வழக்கம் கடந்த சில ஆண்டுகளாக தொடர்கதையாகி வருகிறது.

'சர்கார்' பட பாடலுக்கு விளக்கம் அளித்த பாடலாசிரியர் விவேக்

விஜய், ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியர் விவேக் ஆகியோர் மெர்சல் படத்திற்கு பின்னர் மீண்டும் 'சர்கார்' படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தில் இடம்பெற்ற சிம்டாங்காரன்' என்ற பாடல் இன்று மாலை 6வெளியாகவுள்ளது.

'அறம்' இயக்குனரின் அடுத்த படத்தில் 'பிக்பாஸ்' புகழ் டேனியல்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'அறம்' என்ற வெற்றிப்படத்தை இயக்கிய இயக்குனர் கோபி நயினார் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை நேற்று முதல் தொடங்கிவிட்டார்.

பிரபல பின்னணி பாடகியின் கணவர் மறைவு

தமிழ், உள்பட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடிய பின்னணி பாடகி வாணி ஜெயராம் அவர்களின் கணவர் ஜெயராம் இன்று காலமானார்.