விஜய் டிவி கோபிநாத்தின் திருமண புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..!

  • IndiaGlitz, [Tuesday,February 07 2023]

விஜய் டிவியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக ’நீயா நானா’ என்ற ரியாலிட்டி ஷோவை நடத்திவரும் கோபிநாத்தின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

’நீயா நானா’ ’விஜய் விருதுகள்’ ’குற்றமும் பின்னணியும் நடந்தது என்ன’ ’உன்னால் முடியும்’ உள்பட பல நிகழ்ச்சிகளை விஜய் டிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் கோபிநாத் சில புத்தகங்களையும் எழுதி உள்ளார் என்பதும், 'வாமனன்’ ’தோனி’ ’நிமிர்ந்து நில்’ ’திருநாள்’ உள்பட ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே.

இந்தியா டுடே வழங்கிய இளம் சாதனையாளர் விருது கடந்த 2006 ஆம் ஆண்டு இவருக்கு கிடைத்தது என்பது மேலும் சில விருதுகளையும் இவர் வென்று உள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தொகுப்பாளர் கோபிநாத்தின் திருமண புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது. இவர் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கோட் அணிந்து நிகழ்ச்சியை நடத்துவதால் இவரை கோட் கோபிநாத் என்று பலர் கூறுவார்கள். ஆனால் அவர் திருமணத்தின் போது கூட கோட் அணியாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கோபிநாத்துக்கு ஒரு மகள் உள்ளார் என்பதும் அவருடைய புகைப்படமும் வைரலாகி வருகிறது.

More News

'லியோ' காஷ்மீர் படப்பிடிப்பில் இருந்து த்ரிஷா திரும்பவில்லை.. சொன்னது யார் தெரியுமா?

தளபதி விஜய் நடித்துவரும் 'லியோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்புக்கு விஜய் உடன் சென்றிருந்த த்ரிஷா 3 நாட்களில் சென்னை திரும்பி

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கமல்ஹாசனை திடீரென சந்தித்த விக்ரமன்.. என்ன காரணம்?

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக விக்ரமன் தான் தேர்வு செய்யப்படுவார் என அனைவரும் நம்பிக்கொண்டிருந்த நிலையில் திடுக்கிடும்

பிரபுதேவாவுக்கு இணையாக திறமையை வெளிப்படுத்திய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: வைரல் வீடியோ

பிரபுதேவாவுக்கு இணையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. 

சுழன்று சுழன்று பறந்து பறந்து அடிக்கும் நடிகை.. 'சூர்யா 42' படத்தில் செம விருந்து காத்திருக்கு?

 'சூர்யா 42' படத்தில் நாயகியாக நடித்து வரும் நடிகை திஷா பதானி தனது சமூக வலைதளத்தில் சுழன்று சுழன்று பறந்து பறந்து அடிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சந்தானம் படத்தில் டாக்டர் ஆகும் தனுஷ், சிம்பு நடிகை: வைரல் புகைப்படம்..!

 சந்தானம் நடித்துள்ள திரைப்படத்தில் தனுஷ், சிம்பு படத்தில் நடித்த நடிகை இணைந்துள்ள நிலையில் அந்த படத்தில் அவர் டாக்டர் கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.