close
Choose your channels

விஜய் டிவி கோபிநாத்தின் திருமண புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..!

Tuesday, February 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக ’நீயா நானா’ என்ற ரியாலிட்டி ஷோவை நடத்திவரும் கோபிநாத்தின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

’நீயா நானா’ ’விஜய் விருதுகள்’ ’குற்றமும் பின்னணியும் நடந்தது என்ன’ ’உன்னால் முடியும்’ உள்பட பல நிகழ்ச்சிகளை விஜய் டிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் கோபிநாத் சில புத்தகங்களையும் எழுதி உள்ளார் என்பதும், 'வாமனன்’ ’தோனி’ ’நிமிர்ந்து நில்’ ’திருநாள்’ உள்பட ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே.

இந்தியா டுடே வழங்கிய இளம் சாதனையாளர் விருது கடந்த 2006 ஆம் ஆண்டு இவருக்கு கிடைத்தது என்பது மேலும் சில விருதுகளையும் இவர் வென்று உள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தொகுப்பாளர் கோபிநாத்தின் திருமண புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது. இவர் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கோட் அணிந்து நிகழ்ச்சியை நடத்துவதால் இவரை கோட் கோபிநாத் என்று பலர் கூறுவார்கள். ஆனால் அவர் திருமணத்தின் போது கூட கோட் அணியாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கோபிநாத்துக்கு ஒரு மகள் உள்ளார் என்பதும் அவருடைய புகைப்படமும் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.