இது என் குடும்பத்தின் புதிய உறுப்பினர்: விஜய் டிவி ஜாக்குலின் பதிவு செய்த புகைப்படம்!

  • IndiaGlitz, [Tuesday,September 07 2021]

விஜய் டிவி பிரபலமான ஜாக்குலின் புத்தம் புதிய கார் வாங்கியதை அடுத்து இது என்னுடைய இரண்டாவது வீடு என்றும் இது என் குடும்பத்தின் புதிய உறுப்பினர் என்றும் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவு செய்துள்ளார்.

‘கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் புகழ்பெற்ற ஜாக்குலின் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்தார் என்பதும் விஜய் டிவி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜாக்லின் புதிய கார் வாங்கியுள்ளதாக தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். கார் என்பது ஒரு வாகனம் மட்டுமின்றி அது நமது ஒவ்வொருவரின் உணர்ச்சியை பிரதிபலிக்கும் இரண்டாவது வீடு. என் குழந்தை பருவத்தில் இருந்தே எனக்கு கார்கள் மீது அலாதி பிரியம். அதுவும் என் அப்பா காரை டிரைவ் செய்யும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இப்போது நான் வாங்கியுள்ள இந்த புதிய கியா செல்டாஸ் கார் எனது குடும்பத்தின் புதிய உறுப்பினர். என்னை நேசித்த அனைவருக்கும், என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று ஜாக்குலின் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.