'பிக்பாஸ் தமிழ் சீசன் 7': அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடும் விஜய் டிவி.. வைரலாகும் ட்வீட்..!

  • IndiaGlitz, [Friday,August 18 2023]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆறு சீசன்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 தொடங்கும் என்று கூறப்பட்டது. அது மட்டும் இன்றி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 7 குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று இரவு 7.7 மணிக்கு விஜய் டிவி அறிவிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. விஜய் டிவி தனது ட்விட்டர் பக்கத்தில் ’இன்று மாலை 7.7 மணிக்கு ரெடியா இருங்கள்’ என்று அறிவித்துள்ளதையடுத்து இந்த 7.7 என்பது பிக் பாஸ் சீசன் 7வது சீசன் என்பதையே குறிக்கிறது என ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஏற்கனவே பிக்பாஸ் தமிழ் சீசன் 7 ப்ரோமோ வீடியோவில் கமல்ஹாசன் நடித்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அந்த வீடியோ இன்று இரவு 7 மணிக்கு வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலம் ஜாக்குலின், கடந்த சீசனில் கலந்து கொண்ட ரக்சிதாவின் கணவர் தினேஷ், நடிகை ரேகா நாயர், நடிகர் பிருத்விராஜ், கோவை சேர்ந்த பெண் டிரைவர் ஷர்மிளா, பாலிமர் டிவி செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

மீண்டும் வில்லனாக விஜய்சேதுபதி? இம்முறை ஹீரோ இந்த பிரபல நடிகரா?

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், ஷாருக்கான் ஆகியோர்களின் படங்களில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி, தற்போது அடுத்ததாக எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் நடித்த

தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனுக்கு நன்றி தெரிவித்த ஷங்கர்.. என்ன காரணம்?

தன்னை இயக்குனராக அறிமுகம் செய்த பிரபல தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனுக்கு நன்றி தெரிவித்து ஷங்கர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருத்திகா உதயநிதியின் அடுத்த படத்தில் இந்த பிரபல நடிகரா? மாஸ் தகவல்..!

 கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவான 'பேப்பர் ராக்கெட்' என்ற வெப் தொடர் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. 

சென்னையில் 'ஜவான்' புரமோஷன் நிகழ்ச்சி.. தளபதி விஜய் கலந்து கொள்கிறாரா?

ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில், அட்லி இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக தொடங்க

மழையால் தள்ளிப்போன 'மறக்குமா நெஞ்சம்': புதிய தேதியை அறிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்..!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்த இருந்த 'மறக்குமா நெஞ்சம்' என்ற நிகழ்ச்சி சமீபத்தில் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் புதிய தேதியை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில்