close
Choose your channels

விஜய் டிவி பிரியங்காவுக்கு 2வது திருமணம்.. தாலி கட்டிய கணவர் யார் தெரியுமா?

Thursday, April 17, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர் மற்றும் பிக் பாஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளின் போட்டியாளராக இருந்த பிரியங்காவுக்கு இரண்டாவது திருமணம் நடந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதை அடுத்து, அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிரியங்காவின் திருமண வீடியோ சமூக வலைதளங்களிலும் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. ஏப்ரல் 16ஆம் தேதி, அதாவது நேற்று இந்த திருமணம் நடந்ததாகவும், இந்த திருமணத்தில் பிரியங்கா மற்றும் மாப்பிள்ளையின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

பிரியங்காவை திருமணம் செய்து கொண்டவரின் பெயர் வசி என்றும், இவர் ஒரு டிஜே என்றும் கூறப்பட்டு வருகிறது. மேலும், தாலி கட்டியவுடன் பிரியங்காவின் நெற்றியில் வசி முத்தமிட்ட காட்சியும் இந்த வீடியோவில் உள்ளது.

இந்த வீடியோவில் பிரியங்காவின் அம்மா மற்றும் சகோதரர்கள் இருப்பதால், இது படப்பிடிப்புக்கான வீடியோ அல்ல என்றும், நிஜ திருமணம் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பிரியங்காவுக்கு ரசிகர்கள் மற்றும் விஜய் டிவியில் உள்ள பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை பிரியங்கா திருமணம் செய்து கொண்ட நிலையில், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.

அதன் பின்னர் தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்த பிரியங்கா, தற்போது வசி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment