விஜய் டிவி புகழ் ஹீரோவாக நடிக்கும் 2வது படம்.. 'தோனி' பெயரில் டைட்டில்.. விஜய் சேதுபதி செய்த உதவி..!

  • IndiaGlitz, [Sunday,March 24 2024]

விஜய் டிவி புகழ் ஏற்கனவே ’மிஸ்டர் ஜு கீப்பர்’ என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்து வரும் நிலையில் தற்போது அவர் ஹீரோவாக நடிக்கும் இன்னொரு படத்தின் பர்ஸ்ட் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள நிலையில் தோனி பெயரில் உள்ள அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர் புகழ் என்பதும் குறிப்பாக ’குக் வித் கோமாளி’ ’காமெடி ராஜா கலக்கல் ராணி’ உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். மேலும்கடந்த சில ஆண்டுகளாக அவர் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

‘கைதி’ ’சபாபதி’ ’வாய்மை’ ’யானை’ உள்ளிட்ட படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து வந்த புகழ் ’ஆகஸ்ட் 16 1947’ என்ற படத்தில் குணச்சித்திர கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் அதன் பின்னர் தற்போது ’மிஸ்டர் ஜு கீப்பர்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் டிவி புகழ் நடிக்கும் ஹீரோவாக நடிக்கும் அடுத்த படத்திற்கு ’டைமண்ட் தோனி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஜோஜின் என்பவர் இயக்க உள்ள நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்த படத்தை டைமண்ட் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது. அபிஷேக் என்பவர் இசையமைத்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

More News

வைஃபுக்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட ஆர்ஜே விஜய்.. குவியும் வாழ்த்துக்கள்..!

தொலைக்காட்சியின் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து வரும் ஆர்ஜே விஜய் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது அவர் ஹீரோவாகியுள்ளார்.

1 மணி நேரத்திற்கு 5 லட்ச ரூபாய்.. பணம் கொடுத்தால் மட்டுமே இனி சந்திப்பு: திரையுலக பிரபலம் அறிவிப்பு..!

இனிமேல் என்னை சந்திக்க வருபவர்கள் பணம் கொடுத்தால் மட்டுமே அப்பாயிண்ட்மெண்ட் வழங்கப்படும் என்றும் ஒரு மணி நேரத்திற்கு 5 லட்சம் ரூபாய் முன்கூட்டியே பணம் கொடுக்க வேண்டும் எ

பறக்கும் பணம், தங்கம், இரும்புச் சங்கிலி.. பார்க்கவே வித்தியாசமாக இருக்கும் ஜெயம் ரவியின் 'ஜெனி' ஃபர்ஸ்ட்லுக்..!

ஜெயம் ரவி நடித்து வரும் 'ஜெனி' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

திடீரென இணைந்த அனிருத் - ஜடேஜா கூட்டணி.. என்னவா இருக்கும்?

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா ஆகிய இருவரும் இணைந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ரசிகர்கள் இந்த புகைப்படம் எதற்காக இருக்கும் என்று கேள்வி

நான் எதிர்பாராத காதல்.. நான் எதிர்பாராத திருமணம்.. 'குட்நைட்' நடிகையின் நெகிழ்ச்சியான பதிவு..!

மணிகண்டன் நடித்த 'குட்நைட்' திரைப்படத்தில் நாயகியாக நடித்த மீதா ரகுநாத் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களது திருமணம் குறித்தும், காதல் குறித்தும் நெகிழ்ச்சியான