ரியல் ஜோடி ஆன ரீல் ஜோடி.. விஜய் டிவி சீரியல் நடிகரின் நிச்சயதார்த்த புகைப்படம்..!

  • IndiaGlitz, [Thursday,February 02 2023]

தொலைக்காட்சி சீரியலில் ஜோடியாக நடிக்கும் நட்சத்திரங்கள் நிஜத்திலும் ஜோடியாகி வருகின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். குறிப்பாக சரவணன் மீனாட்சி சீரியல் நடித்த செந்தில் - ஸ்ரீஜா, ராஜா ராணி சீரியலில் நடித்த சஞ்சீவ் - ஆல்யா மானசா ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர். அந்த வகையில் தற்போது மேலும் ஒரு ரீல் ஜோடி ரியல் ஜோடியாக மாற உள்ளதை அடுத்து அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

’தவமாய் தவமிருந்து’ என்ற சீரியலில் ஜோடியாக நடித்தவர்கள் பிரிட்டோ மற்றும் சந்தியா ராமச்சந்திரன் என்பது தெரிந்தது. இந்த சீரியலில் இருவரது கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நிலையில் தற்போது இருவரும் நிஜத்திலும் இணைய உள்ளனர்.

’தவமாய் தவமிருந்து’ சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது இருவரும் காதல் வயப்பட்டதாகவும், இதனை அடுத்து இரு தரப்பு பெற்றோர்கள் பேசி முடித்து திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த மாதம் 25ஆம் தேதி நிச்சயதார்த்தம் ஆனதாக இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் நிச்சயதார்த்த புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது. விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் பிரிட்டோ தற்போது ’ராஜா ராணி 2 ’ சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் அதேபோல் சந்தியா ராமச்சந்திரன் ஒரு சில சீரியலில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

More News

'தளபதி 67' படத்தில் நடிக்கும் குழந்தை நட்சத்திரம் இரட்டை குழந்தைகளில் ஒருவரா??

 விஜய் நடிக்கும் 'தளபதி 67' படத்தின் அப்டேட்டுகளை அவரது ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருந்த நிலையில் நேற்றும், முன்தினமும் போதும்போது என்ற அளவுக்கு அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளிவந்தன என்பதை பார்த்தோம்.

'தளபதி 67' வில்லன் சஞ்சய்தத்துக்கு இத்தனை கோடியா சம்பளம்?

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 67' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புகள் கடந்த இரண்டு நாட்களாக சமூக

14 மாதங்கள் பாலியல் சித்ரவதை.. ரஜினி, விஜயகாந்த் நடிகை திடுக்கிடும் புகார்..!

 ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்பட பல பிரபலங்களின் படங்களில் நடித்த நடிகை ஒருவர் தயாரிப்பாளர் ஒருவரால் தான் 14 மாதங்கள் பாலியல் சித்ரவதை செய்யப்பட்டதாக கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிம்புவின் செம டான்ஸ்.. 'நம்ம சத்தம்' பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ!

சிம்பு நடித்த 'பத்து தல' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் வரும் மார்ச் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது

உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள்.. உடல்நிலை குறித்து விஜய் ஆண்டனி டுவிட்..!

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி சமீபத்தில் மலேசியாவில் நடந்த படப்பிடிப்பில் காயம் அடைந்த நிலையில் அவர் தற்போது தனது உடல்நிலை குறித்த தகவலை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.