புதிய கார் வாங்கிய விஜய் டிவியின் இன்னொரு பிரபலம்!

விஜய் டிவியில் வாய்ப்பு கிடைத்துவிட்டால் வாழ்க்கையில் செட்டிலாகி விடலாம் என்று பலர் சொல்வதைக் கேட்டிருப்போம். அதேபோல் விஜய் டிவியில் பிரபலமாகி வருபவர்கள் சொந்தகாரும் வாங்கி வருகிறார்கள்

அந்த வகையில் விஜய் டிவியில் ’குக் வித் கோமாளி’ பிரபலம் புகழ் கார் வாங்கினார். அதனை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிவானி நாராயணன் மற்றும் தாடி பாலாஜி அடுத்தடுத்து கார்களை வாங்கினர். இதனை அடுத்து குக் வித் கோமாளி பிரபலம் மணிமேகலை மற்றும் ஜாக்லின் கார் வாங்கினார்கள். அதேபோல் ’கலக்கப்போவது யாரு’ பிரபலமான சரத் புதிய கார் வாங்கினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது அந்த வரிசையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கேப்ரில்லா புதிய கார் வாங்கியுள்ளார். தனது புதிய காருடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த கேப்ரில்லா அதில் கூறியிருப்பதாவது:

பல மாதங்கள் யோசித்துவிட்டு இறுதியாக ஒரு புதிய காரை வாங்க முடிவு செய்தேன். டாடா ஹாரியர் டார்க் எடிஷன் காரை நான் தேர்ந்தெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் எனக்கு கொடுக்கும் அன்பும், ஆதரவினால் தான் இது சாத்தியமானது’ என்று பதிவு செய்துள்ளார்.

புதிய கார் வாங்கிய கேப்ரில்லாவுக்கு ரம்யா பாண்டியன், சம்யுக்தா, ஆஜித் உள்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

More News

இரண்டு தாதா சாகேப் பால்கே விருதுகளை வென்ற 'ஜெய்பீம்': குவியும் வாழ்த்துக்கள்

 சூர்யா நடித்த 'ஜெய்பீம்'  திரைப்படத்திற்கு இரண்டு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்துள்ளதாக சற்றுமுன் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. 

காதலுக்கு பின் சினேகாவுடன் எடுத்த முதல் புகைப்படம்: பிரசன்னா

தமிழ் திரை உலகின் நட்சத்திர ஜோடிகளான பிரசன்னா-சினேகா ஜோடியின் காதலுக்குப்பின் எடுத்த முதல் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது .

மீண்டும் தலையெடுத்த கொரோனா… உயிருடன் இருந்தவரை புதைக்க முயன்ற சோகம்!

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிக்கொண்ட உலகநாடுகள், சமீபத்தில்தான் கொரோனா கட்டுப்பாடுகளை

தகதகவென ஜொலிக்கும் ரம்யா பாண்டியன்: லேட்டஸ் போட்டோஷூட்!

நடிகை ரம்யா பாண்டியன் தனது சமூக வலைத்தளத்தில் தகதகவென ஜொலிக்கும் உடையில் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன 

வாடிவாசலுக்கு முன்பே ஒரு படம்: வெற்றிப்பட இயக்குனருடன் மீண்டும் கைகோர்க்கும் சூர்யா!

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் சூர்யா தற்போது 'சூர்யா 41' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது