close
Choose your channels

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த விஜய் டிவி பிரபலமா? கலகலப்புக்கு பஞ்சமிருக்காது!

Wednesday, September 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 9ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்த தகவலும் அவ்வப்போது கசிந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஏற்கனவே விஜய் டிவி பிரபலம் திவ்யதர்ஷினி என்ற டிடி ஒரு போட்டியாளர் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு விஜய் டிவி பிரபலம் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அவர்தான் மைனா நந்தினி.

சரவணன் மீனாட்சி உள்பட ஒரு சில தொடர்களில் நடித்த மைனா நந்தினி தற்போது மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை உள்பட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அதுமட்டுமின்றி திரைப்படங்களிலும் இவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மைனா நந்தினி எப்போதும் கலகலவென்று பேசும் பழக்கம் உடையவர் என்பதால் பிக்பாஸ் வீட்டில் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.