close
Choose your channels

சொந்த வீடு கட்டிய விஜய் டிவி சீரியல் நடிகை.. கணவர் மகனுடன் கிரகப்பிரவேசம்..!

Tuesday, March 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னர் பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்த நடிகை ஒருவர் சொந்த வீடு கட்டி கிரகப்பிரவேசம் நடத்தி குடியேறிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த 1983 ஆம் ஆண்டு வெளியான ’முந்தானை முடிச்சு’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை சுஜிதா. இதன் பின்னர் அவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் அதன் பின்னர் முக்கிய கேரக்டர்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக ’பள்ளிக்கூடம்’ ’தாண்டவம்’ ’தியா’ உள்ளிட்ட படங்களில் அவரது கேரக்டர் பேசப்படும் வகையில் இருந்தது.

மேலும் விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தின் நாயகியான மாளவிகா மோகனனுக்கு டப்பிங் குரல் கொடுத்து உள்ளார் என்பதும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் நடித்து வரும் தொடர்களில் ஒன்று ’பாண்டியன் ஸ்டோர்’ என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை சுஜிதா, தனுஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு தன்வின் என்ற ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் நடிகை சுஜிதா தற்போது பல லட்சம் செலவில் சொந்த வீடு கட்டியுள்ள நிலையில் அந்த வீட்டின் கிரகப்பிரவேசத்தை நடத்தி உள்ளார். கணவர் மற்றும் மகனுடன் கிரகப்பிரவேச நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.