close
Choose your channels

சர்ச்சையான தனியார் டிவி சீரியல் ப்ரோமோ.....! சரியான பதிலடி தந்த வருண்குமார் ஐ.பி.எஸ்....!

Monday, July 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

 

தனியார் தொலைக்காட்சியில் வெளியான பிற்போக்கான சீரியல் ப்ரமோ-விற்கு, தக்க பதிலடி கொடுக்கும் வகையில் வருண்குமார் ஐ.பி.எஸ் விளக்கமளித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி சேனலில் "தென்றல் வந்து என்னை தொடும்" என்ற நாடகத்தின் ப்ரோமோ அண்மையில் வெளியானது. இதில் வினோத்பாபு கதாநாயகனாகவும், பவித்ரா ஜனனி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் கவனம் ஈர்த்த இந்த வீடியோவிற்கு, சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

அந்த ப்ரோமோவில் "வெளிநாட்டில் இருந்து படித்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பும் பவித்ரா, பாரம்பரியத்தை மறக்காமல் கோவிலுக்கு செல்கிறார். அப்போது காதல் கல்யாணம் செய்யும், இரு காதலர்களை மிரட்டி பெண் கழுத்தில் இருக்கும் தாலியை கழட்ட சொல்கிறார் வினோத். அப்போது நாயகி என்ட்ரீ கொடுத்து, அவனை கண்டிக்கிறார். உடனே அவர் தாலியை கட்டி, குங்குமம் வைத்து விட்டு, இப்படி செய்தா நம்ம 2 பேருக்கும் கல்யாணம் ஆயுடுச்சுனு அர்த்தமா...?"என கூறி விட்டு செல்கிறார். இந்த ப்ரோமோ பிற்போக்குத் தனமாக இருப்பதாகவும், இது சீரியல் மூலம் சமூகத்திற்கு விஷமமான செய்திகளை கொண்டு சேர்ப்பது போல உள்ளதாகவும் பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஐ.பி.எஸ், இதுகுறித்து தக்க விளக்கம் ஒன்றை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் பெண்களை துன்புறுத்தினால் கிடைக்கும் தண்டனைகள் குறித்து கூறியிருப்பதாவது, "பிரிவு 4-ன் படி கல்வி நிலையங்கள், கோயில் மற்றும் இதர வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையம், சாலை, ரயில்வே நிலையம், சினிமா தியேட்டர், பார்க், பீச், திருவிழா நடக்கும் இடங்கள், பொதுப் போக்குவரத்து வாகனங்கள் போன்ற இடங்களில், பெண்களை துன்புறுத்தினால், அவர்களுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். இழப்பீடாக குறைந்தது 10,000 ரூபாய் வசூல் செய்யப்படும்" என்று பதிவிட்டுள்ளார். இவரின் பதிவிற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

சீரியல்கள் மற்றும் சினிமாக்களில் வருவதை பார்த்துவிட்டு, நம்ம ஊரில் இளம்காளைகள் சில்வண்டு வேலைகள் செய்தால், ஜெயலில் போய் கம்பி எண்ண வேண்டியிருக்கும். அதனால் உஷார்-அ இருங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.