மீண்டும் திருடும் மீனா தம்பி.. கூண்டில் அடைக்கப்பட்ட விஜயா.. 'சிறகடிக்க ஆசை' சீரியலில் திருப்பம்..!

  • IndiaGlitz, [Wednesday,September 20 2023]

விஜய் டிவியில் பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
விஜயாவிடம் இருந்து திருடிய ஒரு லட்ச ரூபாயை மனோஜ் திருப்பிக் கொடுத்த போது அதில் 4000 ரூபாய் குறைகிறது என்று முத்து கேட்கிறார். இதனை அடுத்து ரோகிணி அந்த 4000 ரூபாயை கொடுத்து பிரச்சினையை முடிக்கிறார்

இந்த நிலையில் வேலைக்கு செல்கிறேன் என்று கூறும் மனோஜ் பார்க்கில் தூங்கியும் சாப்பிட்டுக் கொண்டும் பொழுதை கழிக்கிறார். அப்போது திடீரென ரோகிணி ஃபோன் செய்து ’நீங்கள் வேலை செய்யும் உங்கள் கார் ஷோரூமில் தான் நான் இருக்கிறேன், உங்களை சந்திக்க வந்திருக்கின்றேன்’ என்று கூற அப்போது மனோஜ் அதிர்ச்சி அடைந்து, தான் வெளியில் இருப்பதாக கூறி இப்போதைக்கு சமாளித்து விடுகிறார்.

இந்த நிலையில் வட்டி கட்டவில்லை என்று விஜயாவிடம் வட்டி கொடுத்தவர் மிரட்ட இதோ வட்டி கட்டுவதற்கு தான் கிளம்பி கொண்டிருக்கிறேன் என்று விஜயா கூறுகிறார். அவர் பணத்தை எடுத்துவிட்டு வட்டி கட்ட சென்று கொண்டிருக்கும் போது தான் திடீரென பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அவரது கைப்பையை பிடுங்கி பணத்தை திருடி விட்டு சென்று விடுகின்றனர். இதனை அடுத்து வட்டி கொடுத்தவர் விஜயாவை கூண்டில் அடைக்கிறார், அதை மீனா தற்செயலாக பார்ப்பதுடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

ஆனால் நாளைய எபிசோடுக்கான புரமோவில் விஜயாவிடம் இருந்து பணத்தை திருடியது மீனாவின் தம்பி சத்யா தான் என்று காண்பிக்கப்படுகிறது. நீ பணத்தை திருடாமலேயே உன் மேல் திருட்டு பட்டம் செலுத்தினார்கள், நீ உண்மையிலேயே திருடினால் என்ன? என்று அவரை நண்பர்கள் ஏற்றி விட, அவர் விஜயாவிடம் இருந்து பணத்தை பிடுங்குகிறார்

இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? மீண்டும் சத்யாவால் மீனாவுக்கு பிரச்சனை ஏற்படுமா? விஜயா யாருக்கும் தெரியாமல் வட்டிக்கு வாங்கியது வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிய வருமா? என்பது அடுத்தடுத்து வரும் எபிசோடுகளில் தான் தெரிய வரும்.

More News

நான் கேட்டதை விட 3 மடங்கு சம்பளம் கொடுத்தார்கள்.. 'ஜெயிலர்' பிரபலம் தகவல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் 650 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சன் அடுத்த படத்தின் நாயகி பூஜா ஹெக்டே? நாயகன் யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' என்ற திரைப்படத்தை நெல்சன் இயக்கினார் என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியது என்பதும் தெரிந்ததே.

அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தில் பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னர் வில்லனா?

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் டைட்டில் பட்டம் பெற்ற நடிகர், அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

நடிகை மீனா இதுவரை நடிக்காத கேரக்டர்.. விறுவிறுப்பான படப்பிடிப்பு..!

 நடிகை மீனா இதுவரை நடிக்காத கேரக்டரில் நடித்து வரும் நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

செப்டம்பர் 28 ரிலீஸ் பட்டியலில் இருந்து விலகிய திரைப்படம்.. என்ன காரணம்?

செப்டம்பர் 28ஆம் தேதி ஐந்து திரைப்படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதில் ஒரு படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.