close
Choose your channels

ஸ்டார் விஜய் சூப்பர் சிங்கர் சீசன் 9; பைக்குகளை வெல்ல போட்டியாளர்கள் போட்டி !

Thursday, March 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் கடந்த சில மாதங்களாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9வது சீசன் நடந்து வருகிறது என்பதும் இந்த சீசனில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது 10 போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு புதுமையான சுற்றுகள் வைக்கப்பட்டு அந்த சுற்றுக்களீல் சிறப்பாக பாடுபவர்களுக்கு பைக் பரிசு காத்திருக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வார எபிசோடில் சந்தோஷ் நாராயணன், சாம் சிஎஸ், விஜய் யேசுதாஸ், ஹரிசரண், ஷ்கதிஸ்ரீ கோபாலன், சத்யபிரகாஷ் என ஆறு சிறப்பு நடுவர்கள் குழு இருப்பார்கள். ஃப்ரீஸ்டைல் சுற்றுக்கு போட்டியாளர்கள் பாடும்போது நடுவர்கள் பஸ்ஸரை அழுத்தினாள் அவர்கள் தேர்வுசெய்யப்பட்டார்கள் என்று அர்த்தம். அவ்வாறு அவர்கள் குறைந்தது ஐந்து முறை வெற்றிபெறவேண்டும்.

ஒரு போட்டியாளர் 6 பஸர்களை வெல்ல முடியும். அதிகபட்சமாக 60 பஸ்ஸரை வெல்ல வாய்ப்பு உள்ளது. அவர்கள் ஒவ்வொருவரும் மொத்தமாக 60க்கு ஐம்பது பஸ்ஸரை வென்றால் 10 போட்டியாளர்களுக்கும் தலா ஒரு பைக் கிடைக்கும். சூப்பர் சிங்கர் சீசன் 9 இசை ஆர்வலர்களுக்கு விருந்தளிக்கும் தனித்துவமான நிகழ்ச்சியாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos