கோவை விமான நிலையத்தில் மேள தாள வரவேற்பு.. விஜய்யை பார்க்க குவிந்த தொண்டர்கள்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


கோவையில் இன்று மற்றும் நாளை தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த முக்கியமான கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, சற்று முன் அக்கட்சியின் தலைவர் விஜய், சென்னை நீலாங்கரை உள்ள அவரது இல்லத்திலிருந்து கோவை நோக்கி புறப்பட்டார்.
அவர் இன்னும் சில மணி நேரங்களில் கோவை அடையப்போவதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, கோவை விமான நிலையம் பகுதியில் ஆயிரக்கணக்கான ’தமிழக வெற்றிக் கழக’ தொண்டர்கள் குவிந்துள்ளனர். மேளதாள ஒலிகளுடன், உற்சாக வரவேற்புக்கான ஏற்பாடுகளை தொண்டர்கள் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கத்தை விட அதிகமாக ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டுள்ளதால், கோவை விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்றும் நாளையும் கோவையில் நடைபெறும் பூத் கமிட்டி கூட்டத்திற்குப் பிறகு, ஒரு பெரும் பேரணி நடத்தும் திட்டமும் உருவாகி வருகிறது என்று கூறப்படுகிறது.
முதல் முறையாக சென்னைக்கு வெளியே ஒரு அரசியல் கூட்டத்தில் விஜய் நேரில் பங்கேற்கும் நிலையில், கோவை நகரமே தற்போது ஒரு கொண்டாட்ட தோற்றத்தில் மாறி இருக்கிறது. விஜயின் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்களின் திரள்வால், நகரம் முழுவதும் பரபரப்பு நிலவுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments