'சொன்னதுக்கு மேலே'..செஞ்சிருக்கிங்க'..விஜய்யிடம் பாராட்டு பெற்ற இயக்குனர்

  • IndiaGlitz, [Friday,December 02 2016]

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது பின்னணி இசை உள்பட போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் பரதன் சமீபத்தில் வார இதழ் ஒன்றில் அளித்துள்ள பேட்டியில் பல புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அவற்றை தற்போது பார்ப்போம்
* விஜய் இந்த படத்தின் கதை முழுவதையும் இரண்டரை மணி கேட்டு அதன் பின்னர் அவர் 'ரொம்ப நல்லா இருக்கு, பண்றோம்' என்று கூறினார்
* 'பைரவா' படத்தை முழுவதையும் பார்த்த பின்னர் விஜய் என்னை கட்டிப்பிடித்து, 'சொன்னதுக்கு மேலே செஞ்சிருக்கிங்க' என்று பாராட்டினார்.
*கிளைமாக்ஸ் சண்டைகாட்சியை பார்த்தவுடன் உடனே அனல் அரசுவை அழைத்து அவரை பாராட்டினார். இந்த படத்தில் நான்கு சண்டைக்காட்சிகள் உள்ளன
* விஜய்யின் டான்ஸ், ஸ்டைல், வசன உச்சரிப்பு, ஆக்சன், காமெடி என அனைத்துமே சூப்பராக வந்துள்ளது. இந்த படம் விஜய் திரையுலக வாழ்க்கையில் முக்கியமான படம்
*இந்த படத்தில் இடம்பெற்ற 'பட்டையை கிளப்பு' பாடலுக்கு போடப்பட்ட செட்டும், கோயம்பேடு மார்க்கெட் போன்ற செட்டும் நிஜமானது போன்றே தோற்றம் அளிக்கும் வகையில் தத்ரூபமாக இருக்கும்
*இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களையும் டான்ஸ் மாஸ்டர் தினேஷ் நடனப்பயிற்சி கொடுத்துள்ளார்.

More News

ரூபாய் நோட்டு பற்றாக்குறை எதிரொலி: மனைவியின் பிணத்துடன் வங்கி வாசலில் கணவர்

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் தடை அறிவிப்பு செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியுள்ளது.

கோவை டூ லண்டன். காரில் செல்லும் தில் பெண்மணிகள்

அண்டை நாடுகளுக்கு செல்வதாக இருந்தால் கூட விமானத்தில் பயணம் செய்து வரும் இந்த காலத்தில் கண்டம் விட்டு கண்டம்...

மோடியின் அடுத்த அதிரடி. தங்கம் வைத்திருக்க திடீர் கட்டுப்பாடு

பாரத பிரதமர் மோடி சமீபத்தில் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பின் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் கருப்புப்பண முதலைகள் வெளிவராமல் உள்ளனர்.

'மாவீரன் கிட்டு'வுடன் இருமுறை இணையும் பார்த்திபன்

சுசீந்திரன் இயக்கிய 'மாவீரன் கிட்டு' திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது...

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷின். விரைவில் அறிமுகம்

பாரத பிரதமர் நரேந்திரமோடியின் ரூபாய் நோட்டுக்கள் குறித்த அதிரடி அறிவிப்பு நாட்டில் பல மாற்றங்களை ஏற்படுத்திவிட்டது....