'புலி'யை அடுத்து மீண்டும் சரித்திரக்கதையில் விஜய்: இயக்குனர் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,May 28 2020]

தளபதி விஜய் நடித்த ஒரே சரித்திர திரைப்படமான ’புலி’ படத்தை அடுத்து மீண்டும் அவர் ஒரு சரித்திர கதையில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மணிரத்தினம் இயக்கவிருந்த ’பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விஜய் நடிக்க உள்ளதாகவும் ஆனால் ஒரு சில காரணங்களால் விஜய் அந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் கூறப்பட்டது

இந்த நிலையில் தற்போது இயக்குனர் சசிகுமார் இயக்கவுள்ள சரித்திர படம் ஒன்றில் விஜய் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. இது குறித்து சசிகுமார் பேட்டி ஒன்றில் கூறியபோது ’எனக்கு வரலாற்றுக் காலத்து உடைகள் அணிந்து சரித்திர கதையம்சம் உள்ள படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இல்லை. ஆனால் அதே நேரத்தில் ஒரு வரலாற்று கதையை இயக்க ஆர்வமாக இருக்கிறேன். அதற்கான கதை ஒன்றை தயார் செய்து வைத்துள்ளேன். அந்த கதையை விஜய்யிடம் கூறியபோது அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. அந்த படத்தில் நடிக்கவும் அவர் சம்மதித்தார். ஆனால் பட்ஜெட் உள்பட ஒருசில காரணங்களால் இந்த படம் இன்னும் தொடங்கவில்லை. இருப்பினும் விரைவில் விஜய்யுடன் சேர்ந்து அந்த வரலாற்று கதையை படமாக்குவேன் என்று சசிகுமார் கூறியுள்ளார்

இதனை அடுத்து மீண்டும் விஜய்யை வரலாற்றுக் திரைப்படம் ஒன்றில் பார்க்க அவரது ரசிகர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது