மருத்துவ சிகிச்சைக்கு கூட பணமில்லை.. வறுமையில் தவிக்கும் விஜயகாந்த், விக்ரம், சூர்யா பட தயாரிப்பாளர்..!

  • IndiaGlitz, [Monday,March 06 2023]

கேப்டன் விஜயகாந்த், சூர்யா, விக்ரம் உள்பட பிரபல நடிகர்களின் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஒருவர் தற்போது தனது மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் வறுமையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

விஜயகாந்த் நடித்த ’கஜேந்திரா’ என்ற திரைப்படம் உள்பட பல திரைப்படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ.துரை. இவர் தயாரித்த விக்ரம், சூர்யா நடித்த ’பிதாமகன்’ திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இவர் தயாரித்த ஒரு சில படங்களால் நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக தற்போது அவர் வறுமையில் வாடுகிறார். மேலும் அவர் நீரிழிவு நோயால் தவித்து வருவதாகவும் அவருக்கு சிகிச்சைக்கு கூட பணம் இல்லை என்றும் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது அவரது நண்பர்கள் அவரை ஒரு வீட்டில் தங்க வைத்து இருப்பதாகவும், அவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்க பெரும் தொகை தேவைப்படுவதால் திரையுலகினர் அவருக்கு கொடுத்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். இது குறித்த வீடியோவும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் வி.ஏ.துரை நிலையை அறிந்து நடிகர் சூர்யா அவரது சிகிச்சைக்காக ரூபாய் 2 லட்சம் வழங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More News

நடிகர் வினித்தின் டீன் ஏஜ் மகள் புகைப்படம்.. ரசிகர்கள் ஆச்சர்யம்..!

தமிழ் திரை உலகில் கடந்த 90களில் நாயகனாக நடித்த நடிகர் வினித்தின் டீன் ஏஜ் மகள் புகைப்படம் திடீரென இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

'மாஸ்டர்' ஆண்ட்ரியா போல் மாறிய 'லியோ' நடிகை.. வைரல் வீடியோ..!

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'மாஸ்டர்' திரைப்படத்தில் நடித்த நடிகை ஆண்ட்ரியா போல் 'லியோ' படத்தில் நடித்து வரும் நடிகை உள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மார்ச் 10ஆம் தேதி வெளியாகும் 'மெமரீஸ்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு  ! 

ஷிஜூ தமீன் பிலிம் பேக்டரி பிரைவைட் லிமிடெட் வழங்கும், நடிகர் வெற்றி நடிப்பில், இயக்குநர்கள் ஷியாம் மற்றும் ப்ரவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள "மெமரீஸ்" திரைப்படம் ஒரு சைக்கோ திரில்லர் படமாகும்.

நடிகர் சோனுசூட் மகன், மகளா இவர்கள்? வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்..!

பிரபல வில்லன் மற்றும் குணசுத்திர நடிகரான சோனு சூட் மனைவி மற்றும் மகன், மகள் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகின்றன. 

சூப்பர் ஸ்டார் பெயரில் நடிக்கும் செல்வராகவன்.. 'மார்க் ஆண்டனி' படத்தின் மாஸ் ஸ்டில்..!

விஷால் நடித்து வரும் 'மார்க் ஆண்டனி'  திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே எஸ்ஜே சூர்யா உள்பட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.