close
Choose your channels

25 வருடங்களுக்கு முன் உங்கள் முகத்தில் தெரிந்த சந்தோஷம்: தந்தைக்கு வாழ்த்து கூறிய பிக்பாஸ் நடிகை

Monday, July 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

25 வருடங்களுக்கு முன் உங்கள் முகத்தில் தெரிந்த சந்தோஷம் இப்போதும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது என நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவருமான விஜயலட்சுமி தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்

கடந்த 1996ஆம் ஆண்டு அஜித், தேவயானி நடிப்பில் அகத்தியன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ’காதல் கோட்டை’. தேவா இசையில் உருவான இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் அஜித்துக்கு மிகப்பெரிய திருப்பத்தை இந்த படம் கொடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் தமிழ் திரை உலகில் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது முதன்முதலில் கிடைத்தது இந்த படத்தின் இயக்குனர் அகத்தியன் அவர்களுக்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று ’காதல் கோட்டை’ திரைப்படம் வெளியாகி 25 வருடங்கள் ஆனதை அடுத்து சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் கொண்டாடினர். இதனை அடுத்து அஜீத் மற்றும் இயக்குனர் அகத்தியன் ஆகியோர்களுக்கு பிரபலங்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இயக்குனர் திரு அவர்களும் வாழ்த்து தெரிவித்தார் என்பதை பார்த்தோம்

இந்த நிலையில் இயக்குனர் அகத்தியன் மகளும் நடிகையுமான விஜயலட்சுமி தனது டுவிட்டரில் கூறியபோது ’காதல் கோட்டை ரிலீசாகி 25 வருடங்கள் ஆகிவிட்டது. வாழ்த்துக்கள் அப்பா! முதல் முதலாக தமிழில் இயக்குனருக்கான தேசிய விருதை நீங்கள் பெற்றது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. 25 வருடங்களுக்கு முன் இந்த செய்தியை கேட்டதும் உங்கள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை நான் பார்த்தது இப்போதும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நான் இப்பொழுது இந்த இடத்தில் இருக்கிறேன் என்றால் அதற்கு நீங்கள் ஒருவர் மட்டுமே காரணம். நன்றி அப்பா! என்று தெரிவித்துள்ளார். விஜயலட்சுமியின் இந்த டுவீட்டுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.