'விஜயானந்த்' : தமிழில் வெளியாகும் பிரபல தொழிலதிபரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்

  • IndiaGlitz, [Tuesday,August 02 2022]

இந்திய அளவில் பிரபலமான கன்னட தொழிலதிபர் விஜய் சங்கேஷ்வரின் வாழ்க்கை வரலாற்றுப்படம் ‘விஜயானந்த்’ என்ற பெயரில் தயாராகியுள்ளது. மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழிலும் வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ் டீஸரை படக்குழுவினர் இன்று {ஆகஸ்ட் 2} காலை 10.05க்கு வெளியிட்டனர்.

டாக்டர்.ஆனந்த் சங்கேஷ்வர், புகழ்பெற்ற VRL குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் மற்றும் விளம்பரதாரர் லாஜிஸ்டிக்ஸ், மீடியா மற்றும் பல துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர், இப்போது விஆர்எல் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ். என்கிற பெயரில் சொந்த படத்தயாரிப்பு நிறுவனமும் தொடங்கியுள்ளார். இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்புதான் ‘விஜயானந்த்’.

இது குறித்துப் பேசிய அவர்,” எங்கள் தயாரிப்பு நிறுவனம் ’விஜயானந்த்’ என்ற முதல் திரைப்பட முயற்சியை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது - இது ஒரு வாழ்க்கை வரலாற்றுப்படம் ஆகும். என் தந்தையும் மரியாதைக்குரிய பிரபல தொழில் அதிபருமான விஜய் சங்கேஷ்வர். 1976 இல் ஒரு சிங்கிள் டிரக் மூலம் தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கியவர். இன்று தேசம் முழுக்க அறியப்பட்ட பிரபல தொழிலதிபர். சிறிய அளவில் தொடங்கி வளர்ந்த அவரது கதையில், அவரது வளர்ச்சிப் பாதையில் ஒரு வாரிசாக ஆனந்த் சங்கேஷ்வராகிய நானும் இடம் பெறுகிறேன் என்பதில் எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் இப்படத்தை தமிழிலும் வெளியிடுவது உள்ளபடியே பெருமிதமாக உணர்கிறேன். ஒரு தன் வரலாற்றுப்படம் மற்ற மொழிகளில் டப் ஆகி வெளிவருவது என்பது இதுவே முதல்முறை ஆகும். அந்தப் பெருமையை எங்கள் விஜயானந்த்’ தட்டிச்செல்வதில் எங்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி”என்கிறார்.

இதற்கு முன் ’டிரங்க்’ என்ற ஹாரர் திரில்லர் படத்தை இயக்கிய ரிஷிகா சர்மா இப்படத்தை இயக்கியுள்ளார். ட்ரங்க் படத்தின் நாயகன் நிஹால், விஜய் சங்கரேஷ்வராக நடிக்கிறார். மற்றும் அனந்த் நாக், வினயா பிரசாத், வி ரவிச்சந்திரன், பிரகாஷ் பெலவாடி, அனிஷ் குருவில்லா,சிரி பிரஹலாத் மற்றும் பரத் போபண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தென்னிந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் கோபி சுந்தர் (பெங்களூர் டேஸ், உஸ்தாத் ஹோட்டல், கீதா கோவிந்தம், மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர்) இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

More News

மீண்டும் தொடங்கப்படுகிறதா 'துருவ நட்சத்திரம்'? நம்பிக்கை தரும் மாஸ் புகைப்படம்!

பிரபல இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த 'துருவ நட்சத்திரம்' என்ற திரைப்படம் நீண்ட காலமாக தாமதமாகி வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும்

'தளபதி 67'க்கு முன் லோகேஷ் கனகராஜின் திடீர் அதிகாரபூர்வ அறிவிப்பு: ரசிகர்கள் ஷாக்!

தளபதி விஜய் நடித்த இருக்கும் 'தளபதி 67' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார் என்பதும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மதுரை அன்புசெழியன் உள்பட சினிமா பிரபலங்கள் அலுவலகங்களில் ஐடி ரெய்டு

கலைப்புலி எஸ் தாணு உள்பட சினிமா பிரபலங்களை வீடுகளில் இன்று ஒரே நாளில் திடீரென வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஈழத்தமிழ் பாடகியை அறிமுகம் செய்யும் பிரபல இசையமைப்பாளர்: இன்று பாடல் ரிலீஸ்

ஏற்கனவே பல புதிய பாடகர்கள், பாடகிகள் அறிமுகம் செய்துள்ள பிரபல இசையமைப்பாளர் தற்போது ஈழத்தமிழ் பாடகி ஒருவரை தமிழ் திரைப்படத்தில் அறிமுகம் செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளன.

சிம்பு படம் உள்பட இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள் என்னென்ன?

 ஒவ்வொரு வாரமும் திரையரங்கில் சுமார் 5 படங்கள் வரை வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் ஓடிடியிலும் அதற்கு இணையான திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.