விஜயகுமார் வீட்டில் டும் டும் டும்.. முதல் அழைப்பு சூப்பர் ஸ்டார் ரஜினிக்குத்தான்..!

  • IndiaGlitz, [Tuesday,February 06 2024]

நடிகர் விஜயகுமார் வீட்டில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முதல் பத்திரிகை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகராக இருக்கும் விஜயகுமார் ஒரு காலத்தில் ரஜினிக்கு முன்பே ஹீரோவாக நடித்தவர் என்பதும் ரஜினியும் அவரும் இணைந்து பல திரைப்படங்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜயகுமாரின் பேத்திக்கு திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் ரஜினிக்கு அவர் தனது முதல் பத்திரிகை குடும்பத்துடன் சென்று அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜயகுமார் மகள்களில் ஒருவர் அனிதா, கோகுல் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் அனிதாவின் மகள் தியாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில் பிப்ரவரி 19ஆம் தேதி தில்லான் என்பவரை திருமணம் செய்யப் போகிறார்.

இதனை அடுத்து விஜயகுமார் தனது மகளுடன் சென்று திரை உலகினருக்கு அழைப்பு விடுத்து வரும் நிலையில் முதல் அழைப்பாக தனது நண்பரான ரஜினி வீட்டிற்கு சென்று அழைப்பு விடுத்துள்ளார். ரஜினியும் மிகவும் மகிழ்ச்சியுடன் கண்டிப்பாக திருமணத்திற்கு வருவேன் என்று வாக்குறுதி அளித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

More News

விஜய் அண்ணா கூட போட்டி போட நான் என்ன லூசா: உதயநிதியின் பழைய பதிவு வைரல்..

தளபதி விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள நிலையில் அவர் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவார்

கோலிவுட்டின் 4 பிரபலங்கள் துவக்கிவைத்த மாஸ்டர் மகேந்திரனின் சர்வைவல் த்ரில்லர்

சிறப்பான திட்டமிடுதலுடன் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் சனா ஸ்டுடியோஸ் வழங்கும், மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கும்  'புரொடக்ஷன் நம்பர்.1' படத்தை கோலிவுட்டின் பிரபல

நடிகை பூஜா குமாரின் மகளா இவர்? அதற்குள் இவ்வளவு வளர்ந்துவிட்டாரே?

நடிகை பூஜா குமார் நேற்று முன்தினம் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவர் தனது கணவர் மற்றும் மகளுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் ஆர்யா.. இந்த படத்திற்காகவா? வைரல் வீடியோ..!

நடிகர் ஆர்யா தனது அடுத்த படத்திற்காக வேற லெவலில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய்யின் 'தளபதி 69' படத்தை இயக்குவது இவரா? அப்ப சூர்யாவின் படம் என்ன ஆச்சு?

விஜய்யின் அடுத்த படத்தை இயக்க கிட்டத்தட்ட எட்டு இயக்குனர்கள் காத்திருக்கும் நிலையில் விஜய்யின் 'தளபதி 69' படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.