விஜய் மில்டனின் 'கடுகு'. சென்சார் மற்றும் ரன்னிங் டைம்

  • IndiaGlitz, [Sunday,March 12 2017]

பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன், கோலி சோடா, '10 எண்றதுகுள்ள' ஆகிய படங்களை அடுத்து இயக்கியுள்ள படம் 'கடுகு'.

பரத், ராஜகுமாரன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படம் சென்சார் சான்றிதழையும் பெற்றுவிட்டது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். இதனால் இந்த படம் தமிழக அரசின் வரிவிலக்கு பெற வாய்ப்பு உள்ளது.

மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 115 நிமிடங்கள் என்று தெரியவந்துள்ளது. இந்த படம் சென்சார் சான்றிதழ் பெற்றுவிட்டதால் மிக விரைவில் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது. இருப்பினும் இந்த படம் வரும் 24ஆம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளது.

பரத், ராஜகுமாரன், பரத் சீனி, சுபிக்ஷா, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் பாடல்களுக்கு அருணகிரி என்பவரும், பின்னணி இசைக்கு அனூப் சீலின் என்பவரும் இசையமைத்துள்ளனர்.

More News

சென்னைக்கு பின் வியட்நாமுக்கு செல்லும் முருகதாஸ் டீம்

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் அதிரடி ஆக்சன் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது. சென்னை படப்பிடிப்பை முடித்தவுடன் இந்த படத்தின் டீம் வியட்நாமுக்கு செல்லவிருப்பதாகவும், அங்கு பாடல் மற்றும் ஒருசில ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் கĭ

ஜெயம் ரவியின் 'வனமகன்' ரிலீஸ் திட்டஃம்

'தனி ஒருவன்', 'போகன்' வெற்றி படங்களுக்கு பின்னர் ஜெயம் ரவி நடித்துள்ள படம் 'வனமகன்', விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், ஜெயம் ரவியின் இன்னொரு 'பேராண்மை'யாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடந்து வருகிறது...

கே.வி.ஆனந்தின் 'கவண்' டிரைலர் விமர்சனம்

கோ, அயன், மாற்றான், அனேகன் போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்த படம் 'கவண்'. விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டியன், விக்ராந்த், டி.ராஜேந்தர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளிவந்Ī

100 வருட சினிமாவுலகில் டைட்டிலில் முதலிடம் பெற்ற நாயகி

தமிழ் சினிமா மட்டுமின்றி உலகின் எந்த மொழி சினிமாவாக இருந்தாலும் டைட்டிலில் முதலில் வருவது நாயகன் பெயர் தான் என்பது எழுதப்படாத விதி. இதற்கு ஆணாதிக்கம் என்று சொல்வதா? அல்லது ஹீரோதான் ஒரு படத்தின் முதுகெலும்பு என்பதால் டைட்டிலில் முதல் இடம் கிடைத்தது என்று கூறுவதா? என்று தெரியவில்லை...

அரசியலில் இருந்து விலகுகிறேன் : இரோம் ஷர்மிளா அதிர்ச்சி அறிவிப்பு

பொது பிரச்சனை ஒன்றுக்காக ஒருநாள் ஜெயிலுக்கு போய்விட்டு வந்தாலே அதை விளம்பரப்படுத்தி வாக்காளர்களை கவர்ந்து வரும் அரசியல் உலகில்,  மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை (AFSPA) நீக்கக் கோரி 16 ஆண்டுகள் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்ட சமூக சேவகி இரோம் ஷர்மிளாவுக்கு கிடைத்தது வெறும் 90 வாக்குகளே...