சிவாஜி, கமல்ஹாசனை மிஞ்சிய விக்ரம்: 'கோப்ரா' ஃபர்ஸ்ட்லுக்

  • IndiaGlitz, [Monday,February 10 2020]

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் ’நவராத்திரி’ என்ற படத்தில் ஒன்பது வேடங்களில் நடித்துள்ளார். அதன்பின்னர் கமல்ஹாசன் தசாவதாரம் படத்தில் பத்து வேடங்களில் நடித்தார். சிவாஜி மற்றும் கமலஹாசனை மிஞ்சும் வகையில் விக்ரம் தற்போது ‘கோப்ரா’ என்ற திரைப்படத்தில் 12 வேடங்களில் நடித்து வருகிறார்.

‘கோப்ரா’ என்ற படத்தில் தான் விக்ரம் 12 வேடங்களில் நடித்துளார் என்பதும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது இது குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில மணி நேரங்களில் வெளியாகும் என தெரிகிறது

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது

விக்ரம், ஸ்ரீநிதிஷெட்டி, இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 7ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, விக்ரம், ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

ஒரே ஒரு செல்பி: ஸ்தம்பித்த சமூக வலைதளங்கள்

ஒரு நடிகர் ஒரே ஒரு செல்பி எடுத்த செய்தி சமூக வலைத்தளத்தில் ஸ்தம்பிக்கும் அளவிற்கு டிரெண்ட் ஆகியுள்ளது சினிமா வரலாற்றில் இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது.

இன்று ஆஜராக விஜய்க்கு சம்மன் அனுப்பிய வருமான வரித்துறை: ஆஜரானாரா விஜய்?

நடிகர் விஜய், ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செல்வன் ஆகியோரது இல்லங்களில் கடந்த வாரம் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர் என்பது தெரிந்ததே

ஆஸ்கார் விருதுகள் 2020: விருது பெற்றவர்கள் குறித்த முழு விபரங்கள்

உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்றான ஆஸ்கர் விருது இன்று அறிவிக்கப்பட்டது.

விஜய் நினைத்து இருந்தால் வேற மாதிரி ஆகியிருக்கும்: நெய்வேலி பாஜக போராட்டம் குறித்து அமீர்

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ள

எத்தனை பிரச்சனை இருந்தாலும் ரசிகர்களை பார்த்ததும் புன்னகைக்கும் தளபதி: ரசிகர்கள் நெகிழ்ச்சி

கடந்த சில ஆண்டுகளில் விஜய் மற்றும் விஜய்யின் படங்கள் சந்தித்த பிரச்சனைகளை போல் வேறு எந்த நடிகரோ அல்லது அவரது படங்களுக்கோ இருந்திருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.