'லியோ' படத்தில் இணையும் 'விக்ரம்' நடிகர்.. LCU உறுதியாகிறதா?

  • IndiaGlitz, [Sunday,April 30 2023]

தளபதி விஜய் நடித்து வரும் ’லியோ’ திரைப்படத்தில் ‘விக்ரம்’ படத்தில் நடித்த முக்கிய நடிகர் ஒருவர் இணைந்துள்ளதை அடுத்த இந்த படம் LCU படம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’லியோ’. இந்த படத்தில் விஜய்யுடன் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், பாபு ஆண்டனி, மன்சூர் அலிகான் உட்பட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர் என்பதும் இந்த படத்தில் த்ரிஷா, ப்ரியா ஆனந்த் என ஒரு மிகப்பெரிய நட்சத்திர கூட்டமே இருக்கிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'விக்ரம்’ திரைப்படத்தில் நடித்த ஜாபர் சாதிக், ‘லியோ’ படத்தில் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ஏற்கனவே ’விக்ரம்’ படத்தில் நடித்த மேலும் ஒரு சில நடிகர்கள் ’லியோ’ திரைப்படத்தில் தோன்றுவார்கள் என்றும் இந்த படம் நிச்சயமாக LCU படம் தான் என்றும் கூறப்பட்டு வருகிறது. ஜாபர் சாதிக்கை அடுத்து இன்னும் ’விக்ரம்’ படத்தில் நடித்த வேறு யார் யாரெல்லாம் ’லியோ’ படத்தில் இணைவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'பொன்னியின் செல்வன் 2' இரண்டு நாள் வசூல் எவ்வளவு? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவான 'பொன்னியின் செல்வன் 2'  திரைப்படம் நேற்று முன் தினம் வெளியாகி மிகப்பெரிய பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது

தயவுசெய்து இதை மட்டும் செய்யுங்கள்: 'லியோ' இயக்குனருக்கு கேரள விஜய் ரசிகர் கடிதம்..!

கேரளாவை சேர்ந்த தளபதி விஜய்யின் ரசிகர் ஒருவர் லோகேஷ் கனகராஜ்-க்கு எழுதிய கடிதத்தில் கேரளாவில் விஜய்யுடன் கூடிய புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றை நடத்துங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றுடன் 24 ஆண்டுகள் ஆகிவிட்டது.. அஜித் படம் குறித்த நினைவுகளை பகிர்ந்த சிம்ரன்..!

அஜித் உடன் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் வெளியாகி இன்றோடு 24 ஆண்டுகள் ஆகிவிட்டது என்ற தனது நினைவுகளை நடிகை சிம்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் இந்தப் பதிவு தற்போது வைரல்

மாலத்தீவு பீச் மணல்.. பிகினி உடை.. என்ன ஒரு டான்ஸ்.. 'கோமாளி' நடிகையின் வைரல் வீடியோ..!

ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படத்தில் நடித்த நடிகை மாலத்தீவு பீச் மணலில், பிகினி உடையில், செம டான்ஸ் ஆடும் வீடியோவை வெளியிட்டு இருக்கும் நிலையில் அந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது. 

முதல் படத்திலேயே விஜய்யுடன் அதிக காட்சிகள்: 'பிக்பாஸ்' போட்டியாளர் உற்சாகம்..!

விஜய் நடித்து வரும் 'லியோ' திரைப்படத்தில் நடித்துள்ள பிக்பாஸ் போட்டியாளர் ஜனனி முதல் படத்திலேயே விஜய்யுடன் அதிக காட்சியில் நடித்துள்ளதாக வெளியாகி உள்ள தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.