'லியோ' படத்தில் இணைந்தாரா 'விக்ரம்' நடிகர்?  உறுதியாகிறதா LCU?

  • IndiaGlitz, [Monday,March 27 2023]

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லியோ’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் இந்த படத்தின் காஷ்மீர் படபிடிப்பு முடிவடைந்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று முதல் சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாகவும் படக்குழுவினர் இதில் கலந்துகொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் தற்போது கசிந்துள்ள தகவலின்படி 'லியோ’ திரைப்படத்தில் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் நடித்த பகத் பாசில் இணைந்துள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து இந்த படம் லோகேஷ் கனகராஜின் LCUவில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் பகத் பாசில் இந்த படத்தில் இணைந்ததை பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை பொறுமை காப்போம்.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித தயாரித்து வருகிறார்.

அனிருத் இசையில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

விஜய்யை அடுத்து அஜித் வீட்டிற்கு சென்ற சூர்யா-கார்த்தி: தந்தை மறைவுக்கு இரங்கல்..!

நடிகர் அஜித்தின் தந்தை பிஎஸ் மணி சமீபத்தில் காலமான நிலையில் அவரது வீட்டிற்கு நேரடியாக சென்ற விஜய், அஜித் தந்தை மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

700 படங்களுக்கும் மேல் நடித்த நகைச்சுவை நடிகர் காலமானார். திரையுலகினர் இரங்கல்..!

 தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்பட 700 படங்களில் நடித்த பிரபல நடிகர் ஒருவர் காலமானதை அடுத்து திரையுலகினர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

ஒரே வாரத்தில் ரூ.13,700 கோடி வசூல் செய்த திரைப்படம்: திரையுலகினர் ஆச்சரியம்..!

 ஹாலிவுட் திரைப்படமான 'ஜான்விக் 4' என்ற திரைப்படம் ரிலீஸ் ஆன ஒரே வாரத்தில் 13 ஆயிரத்து 700 கோடி உலகம் முழுவதும் வசூல் செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் திரையுலகினர்களை ஆச்சரியத்தை ஏற்படுத்தி

தலைமறைவாக வாழும் நடிகையின் கணவர்.. உயிருக்கு ஆபத்தா?

பிரபல நடிகையின் கணவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்வதாகவும் அவரது கணவரின் உயிருக்கு ஆபத்து இருப்பது போன்ற கதை அம்சம் கொண்ட திரைப்படம்  தான் 'பருந்தாகுது ஊர்க்குருவி' என்று இயக்குனர்

ஷங்கர் - ராம்சரண் தேஜாவின் டைட்டில் இதுதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஆர் சி 15'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று