என் தலையை வெட்டிட்டு, ஸ்ருதிஹாசனுடன் ரொமான்ஸா? நியாயம் கேட்கும் 'விக்ரம்' நடிகை..!

  • IndiaGlitz, [Friday,March 22 2024]

ஸ்ருதிஹாசனின் ’இனிமேல்’ என்ற ஆல்பம் வரும் 25ஆம் தேதி ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தளத்தில் வெளியாக இருப்பதாக ப்ரோமோ வீடியோ மூலம் செய்தி வெளியானது என்பதை ஏற்கனவே நேற்று பார்த்தோம். மேலும் நேற்று வெளியான டீசரில் ஸ்ருதிஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது மற்றும் சோபா படுக்கையில் உருண்டு புரள்வது போன்ற காட்சிகள் இருந்ததை அடுத்து இந்த பாடலுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பதோடு இந்த ஆல்பத்தின் பாடலையும் அவர்தான் எழுதியுள்ளார் என்பதும் இந்த ஆல்பத்தில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆல்பத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில் மார்ச் 25ஆம் தேதி வெளியாகும் இந்த ஆல்பத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக நேற்று வெளியான டீசர் வீடியோவில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் கெமிஸ்ட்ரி சூப்பராக இருப்பதாகவும், ஸ்ருதிஹாசனின் கிளாமர், லோகேஷ் கனகராஜின் ரொமான்ஸ் பார்த்து ரசிகர்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது.

இந்த நிலையில் இந்த பாடலின் டீசர் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள ’விக்ரம்’ நடிகை காயத்ரி ’உங்கள் படத்துல ரொமான்ஸ் பண்ணா தலையை வெட்டிட்டு, நீங்கள் மட்டும் என்ன எப்படி ரொமான்ஸ் பண்ணுகிறீர்கள்? என்று ஜாலியாக கேள்வி எழுப்பி உள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’விக்ரம்’ திரைப்படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக காயத்ரி நடித்திருந்தார் என்பதும் இந்த படத்தில் அவரது தலை வெட்டப்படும் காட்சி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் படத்தில் மற்றவர்கள் ரொமான்ஸ் செய்தால் தலையை வெட்டிவிட்டு நீங்கள் மட்டும் செம்மையாக ரொமான்ஸ் செய்து வருகிறீர்களே என்ற ரீதியில் காயத்ரி கேட்ட கேள்விக்கு நெட்டிசன்கள் ஆதரவளித்து வருகின்றனர்.