close
Choose your channels

என்னை எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தினார்கள் தெரியுமா? விவாகரத்து குறித்து மனம் திறந்த 'விக்ரம்' நடிகை!

Saturday, August 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்த விஜே மகேஸ்வரி தன்னை தனது கணவர் வீட்டில் எப்படி எல்லாம் கொடுமைப்படுத்தினார்கள் என்று விவாகரத்திற்கான காரணத்தை கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

90களில் பல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்தவர் விஜே மகேஸ்வரி என்பதும் இவர் ஒரு சில சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் சிலகாலம் மீடியாவை விட்டு ஒதுங்கியிருந்த விஜே மகேஸ்வரி திருமணத்திற்குப் பின்னர் தனது கணவர் வீட்டில் தான் அனுபவித்த கொடுமைகளை சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

தன்னுடைய கணவர் மற்றும் அவரது வீட்டில் இருந்தவர்கள் தன்னை அடிமைப்படுத்தியதாகவும் ஆண் நண்பர்களுடன் பழக கூடாது என்றும் சீரியல்களில் நடிக்க கூடாது என்றும் நிபந்தனை விதித்ததாகவும் அதனால் தொகுப்பாளினியாக மட்டுமே இருந்ததாகவும் தெரிவித்தார்.

சீரியல்களில் நடித்தால் தங்கள் குடும்ப மானம் போய்விடும் என்று கூறி தன்னை கொடுமைப்படுத்தியதாகவும் அது மட்டுமின்றி தனது அம்மாவுக்கு செய்த சிறு சிறு உதவிகளை கூட செய்யக் கூடாது என்று தடுத்து விட்டதாகவும் கூறினார். அம்மாவுக்கு உதவி கிடைக்காததால் எனது அம்மா வீட்டு வேலைக்கு செல்ல முடிவு எடுத்ததாகவும், கஷ்டப்பட்டு வளர்த்த என் அம்மாவை எப்படி நான் வீட்டு வேலைக்கு அனுப்ப முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதனால் பிரச்சனைகள் அனைத்திலும் இருந்து விடுவித்து கொள்ள விவாகரத்து முடிவை எடுத்ததாகவும் விவாகரத்துக்கு பின்னர் தற்போது தான் நிம்மதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘விக்ரம்’  படத்தை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்து கொண்டிருப்பதாகவும் அதேபோல் சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வந்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விஜே மகேஸ்வரிக்க்கு கேஷவ் என்ற ஒரு மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.