ஒரே படத்தில் விக்ரம்-துருவ் விக்ரம் இணைகின்றார்களா? ஆச்சரிய தகவல்

  • IndiaGlitz, [Wednesday,June 03 2020]

சியான் விக்ரம் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ’கோப்ரா’ என்ற திரைப்படத்திலும், மணிரத்னம் இயக்கத்தில் ’பொன்னியின் செல்வன்’ என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் அடுத்தகட்ட படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தை ’மாஸ்டர்’ தயாரிப்பாளர் லலித் தயாரிக்கவுள்ளார். இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் இந்த படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஒரு முக்கிய கேரக்டர் நடிக்கவிருப்பதாகவும், முதன்முதலாக விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணையும் என்ற படத்தில் இருவருக்குமே சம அளவிலான மாஸ் கேரக்டர் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் விக்ரம், மற்றும் துரு விக்ரம் ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது

தமிழ் சினிமாவின் தந்தை-மகன் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது புதிதல்ல. ஏற்கனவே சிவாஜி கணேசன் - பிரபு, சிவகுமார் - சூர்யா, சத்யராஜ் - சிபிராஜ் உள்பட பல தந்தை மகன் நடிகர்கள் ஒரே படத்தில் நடித்துள்ளனர். அந்த வரிசையில் விக்ரம் - துருவ் விக்ரம் திரையிலும் வெற்றிகரமாக வலம் வருவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

More News

கர்ப்பிணி யானை கொல்லப்பட்டதற்கு பிரபல நடிகை கண்டனம்!

கேரளாவில் உள்ள பாலக்காடு பகுதியில் கர்ப்பிணி யானை ஒன்றுக்கு அன்னாசி பழத்தில் வெடிமருந்துகள் வைத்து சாப்பிட கொடுத்து கிராம மக்கள் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மிஷ்கின் - அருண்விஜய் இணையும் படம் சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா?

பிரபல இயக்குனர் மிஷ்கின், விஷால் நடித்த 'துப்பறிவாளன் 2' என்ற படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அவருக்கும் விஷாலுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 'துப்பறிவாளன் 2'

கர்ணம் மல்லேஸ்வரி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் சூர்யா-கார்த்தி பட நாயகி?

இந்தியாவின் பளுதூக்கும் வீராங்கனையும் இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் முதல் முதலாக தங்கம் பெற்று தந்தவருமான கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக இருப்பதாக

பாதுகாப்பு கேட்டு நீதிமன்றம் சென்ற மணமக்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த நீதிபதி!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மணமக்கள் தங்களுடைய திருமணத்தை ஒரு சிலர் எதிர்ப்பதாகவும், அவர்களிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

முகத்தில் துப்பிய 'பிகில்' நடிகைக்கு பதிலடி கொடுத்த காமெடி நடிகர்

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய 'பிகில்' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்தவர்கள் கூட மிகப் பெரிய