கேரள வெள்ள நிவாரண நிதியாக அதிகபட்சம் கொடுத்த விக்ரம்

  • IndiaGlitz, [Sunday,August 19 2018]

கேரளாவில் ஏற்பட்ட வெள்ள சேதத்திற்கு கோலிவுட் திரையுலகினர் கடந்த சில நாட்களாக தாராளமாக நிதி வழங்கி வருவது தெரிந்ததே. 

கார்த்தி-சூர்யா இணைந்து ரூ.25 லட்சம், கமல்ஹாசன் ரூ.25 லட்சம், விஜய்சேதுபதி ரூ.25 லட்சம், ரஜினிகாந்த் ரூ.15 லட்சம், தனுஷ் ரூ.15 லட்சம், சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம், சித்தார்த் ரூ.10 லட்சம், நயன்தாரா ரூ.10 லட்சம், விஷால் ரூ.10 லட்சம், ரோஹினி ரூ.2 லட்சம் என வெள்ள நிவாரண நிதி இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகர் விக்ரம் ரூ.35 லட்சம் கேரள வெள்ள நிவாரண நிதியாக அறிவித்துள்ளார். கோலிவுட் திரையுலகை பொருத்தவரையில் இது அதிகபட்ச தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மருத்துவமனையில் இருந்தபோதிலும் தேசப்பற்றை விடாத சீக்கியர்

கார்கில் போரில் ஈடுபட்ட வீரர்களில் ஒருவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சீக்கியர் முன்னாள் ராணுவ வீரர் சர்தார் லாப்சிங் என்பவர் கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

முடிவுக்கு வந்தது கனமழை: வெதர்மேன் அறிவிப்பால் கேரள மக்கள் நிம்மதி

கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேல் கேரளாவில் பெய்து வந்த கனமழையால் அம்மாநில மக்கள் இதுவரை சந்தித்திராத பேரிடரை சந்தித்துள்ளனர். 

ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் சர்கார்-விஸ்வாசம்?

இந்த ஆண்டின் அதிக எதிர்பார்ப்புக்குரிய படங்களில் தல அஜித் நடித்து வரும் 'விசுவாசம்' மற்றும் தளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' படங்கள் உள்ளது என்றால் அது மிகையில்லை.

ஜெயலலிதா படம் சாத்தியமா? கிளம்பும் போட்டிகளால் குழப்பம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்குனர் விஜய் இயக்கவுள்ளதாகவும், அதற்கான திரைக்கதையை அவர் தயார் செய்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்தது. 

விஜய் நடிக்க யோசித்த கதை தான் 'ஜீனியஸ்' : சுசீந்திரன்

பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ரோஷன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜீனியஸ்' படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது