மகன் துருவ் நடிக்கும் அடுத்த படத்தின் மாஸ் அறிவிப்பை வெளியிட்ட விக்ரம்.. நாளை ஒரு விருந்து இருக்குது..!

  • IndiaGlitz, [Sunday,May 05 2024]

சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த மாஸ் அப்டேட்டை விக்ரம் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விக்ரம் மகன் துருவ் விக்ரம் கடந்த 2019 ஆம் ஆண்டு ’ஆதித்யவர்மா’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பதும் அந்த படம் ஓரளவு வரவேற்பு பெற்ற நிலையில் 2022 ஆம் ஆண்டு தந்தை விக்ரம் உடன் இணைந்து ’மகான்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’மகான்’ வெளியாகி இரண்டு வருடங்கள் ஆகிய பின்னர் துருவ் விக்ரம் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் ஏதும் வெளிவராத நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகும் படம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இந்த படம் குறித்து தான் சியான் விக்ரம் தனது சமூக வலைத்தளத்தில் மாஸ் அப்டேட்டை வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் உற்சாகம் ஆகியுள்ளனர். துருவ் விக்ரம் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தின் முக்கிய அறிவிப்பு மே 6ஆம் தேதி அதாவது நாளை வெளியாக உள்ளதாக விக்ரம் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்த ஒரு புதிய போஸ்டரையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த படத்தை அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் பா ரஞ்சித் இணைந்து தயாரிக்க உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளிவரலாம் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் தொடங்கப்படும் துருவ் விக்ரம் படம், அவருக்கு திரையுலகில் ஒரு திருப்பத்தை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

வைரமுத்து வளர்ச்சி இளையராஜாவுக்கு பிடிக்கவில்லையா? கஸ்தூரிக்கு பதில் அளித்த சீனுராமசாமி..!

இசைஞானி இளையராஜா மற்றும் கவியரசு வைரமுத்து ஆகிய இருவரது பிரச்சனை கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகி வரும் நிலையில் இது குறித்து சீனுராமசாமி கூறிய ஒரு கருத்துக்கு

ஆயிரக்கணக்கான பேருக்கு அசால்டாக சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்.

மெஹந்தி சர்க்க்ஸ் என்ற நாடகத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் மாதம்பட்டி ரங்கராஜன்.ஒரு சிறந்த சமையல்காரராக பிரபலம் அடைந்தார்.இன்று பல இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்..

விவேக்கிற்கு ஜோடியாக நடிக்க மறுத்த கனகா.

பிறகு நான் கனகாவின் அம்மா தேவிகாவிடம் பேசினேன். அதற்கு அவர்கள் விவேக்கிற்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்றால் என் மகள் நிச்சயமாக நடிக்க மாட்டார் என்று கூறிவிட்டார்...

விவேக்கிற்கு ஜோடியாக நடிக்க மறுத்த கனகா.

பிறகு நான் கனகாவின் அம்மா தேவிகாவிடம் பேசினேன். அதற்கு அவர்கள் விவேக்கிற்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்றால் என் மகள் நிச்சயமாக நடிக்க மாட்டார்..

நடிகர் ராமராஜன் வீட்டில் நிகழ்ந்த எதிர்பாராத துக்கம்.. திரையுலகினர் இரங்கல்..!

தமிழ் திரை உலகில் ஒரு காலத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர்களுக்கு இணையாக சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்த ராமராஜன் வீட்டில் திடீரென ஏற்பட்ட துக்கம் காரணமாக திரையுலகினர் அவருக்கு