சிறப்பு தோற்றத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் படம்

  • IndiaGlitz, [Thursday,November 23 2017]

சீயான் விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கி வரும் 'துருவ நட்சத்திரம்', விஜய்சந்தர் இயக்கி வரும் 'ஸ்கெட்ச்' மற்றும் ஹரி இயக்கி வரும் 'சாமி 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களும் அடுத்த ஆண்டு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சீயான் விக்ரம் மலையாள படம் ஒன்றில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பிஜூமேனன், சன்னிவாய்னே நடிப்பில் உருவாகி வரும் 'ரோசாப்பூ' என்னும் படத்தில் விக்ரம் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் வினுஜோசப் இயக்கி வருகிறார்

இந்த படத்தை விக்ரம், நயன்தாரா நடித்த 'இருமுகன்' படத்தை தயாரித்த ஷிபுதமீன்ஸ் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தயாரிப்பாளர் ஷிபுதமீன்ஸ் உடன் கொண்ட நட்பு காரணமாகவே விக்ரம் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.