'பொன்னியின் செல்வன்': விக்ரம் நடித்த அட்டகாசமான கேரக்டரின் போஸ்டர்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் விக்ரம் நடித்த அட்டகாசமான கேரக்டரின் புதிய போஸ்டரை லைகா நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்னம் திரைப்படமாக எடுத்து வருகிறார் என்பதும், இந்தப் படத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி இந்த படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் விக்ரம், இராஜராஜசோழன் கேரக்டரில் ஜெயம் ரவி, வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தி ஆகியோர் நடித்து வரும் நிலையில் சற்றுமுன் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் நடித்த விக்ரமின் புதிய அட்டகாசமான போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

More News

நடிக்க மாட்டேன் என்று விலகிய படத்தில் மீண்டும் இணைகிறாரா விஜய்சேதுபதி?

சூப்பர் ஹிட் படம் ஒன்றில் நடிக்க மாட்டேன் என்று விலகிய விஜய் சேதுபதி மீண்டும் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

'கோமாளி' இயக்குனரின் அடுத்த பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் விஜய் கனெக்சன்!

ஜெயம் ரவி மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் உருவான 'கோமாளி' திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே.

'தி லெஜண்ட்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இதுவா? பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் நடித்துள்ள 'தி லெஜண்ட்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

சூர்யா-சிறுத்தை சிவா படத்தின் நாயகி இந்த பிரபலமா? ரசிகர்கள் உற்சாகம்!

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகை நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு

ஒரு ரூபா கூட செலவில்லாம படம் பாக்க போறேன் மச்சி: 'தமிழ் ராக்கர்ஸ்' டீசர்

ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில், அருண் விஜய் நடிப்பில், அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தமிழ் ராக்கர்ஸ்'  வெப்தொடரின் டீசர் சற்று முன் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது