close
Choose your channels

விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?

Thursday, August 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்ரம் நடித்த ’கோப்ரா’ என்ற திரைப்படம் வரும் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்திற்கான புரமோஷன் பணிகளில் தற்போது விக்ரம் பிஸியாக உள்ளார் என்பதும் தெரிந்ததே.

மேலும் விக்ரம் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் ’கோப்ரா’ படத்தின் புரமோஷன் பணிகள் முடிந்ததும் 'பொன்னியின் செல்வன்’ படத்தின் புரமோஷன் பணிகளை விக்ரம் கவனிப்பார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள மற்றொரு திரைப்படமான ’துருவ நட்சத்திரம்’ திரைப்படமும் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ’கோப்ரா’ மற்றும் 'பொன்னியின் செல்வன்’ படத்தின் புரமோஷன் பணிகள் முடிந்ததும் ’துருவ நட்சத்திரம்’ படத்தில் மீதம் உள்ள பகுதிகளில் நடித்துக் கொடுக்க விக்ரம் முடிவு செய்திருப்பதாகவும் இதனையடுத்து இந்த படத்தின் ஒட்டுமொத்த பணிகளை முடித்து வரும் டிசம்பரில் ரிலீஸ் செய்ய படக்குழு தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மொத்தத்தில் விக்ரம் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து 3 சூப்பர் ஹிட் வெற்றி படங்கள் வெளியாக உள்ளதால் அவரது ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.