சீயான் விக்ரமின் 'கோப்ரா' படத்தின் புதிய அப்டேட்: ரசிகர்கள் உற்சாகம்

  • IndiaGlitz, [Wednesday,February 26 2020]

சீயான் விக்ரம் நடிப்பில், ’டிமாண்டி காலனி, ‘இமைக்கா நொடிகள்’ இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகிவரும் ’விக்ரமின் 58வது படமான ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த காதலர் தினத்தன்றே வெளியாகவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இந்த படத்தின் விக்ரம் நடித்து வரும் 12 வேடங்களின் லுக்கும் ஃபர்ஸ்ட்லுக்கில் வரவேண்டும் என திட்டமிட்டதை அடுத்து ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீசில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ‘கோப்ரா’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வரும் 28ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என இயக்குனர் அஜய்ஞானமுத்து தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதனையடுத்து விக்ரம் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

விக்ரம், ஸ்ரீநிதிஷெட்டி, இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 7ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, விக்ரம், ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

பயம் தேவையில்லை.. டெல்லி தெருக்களில் யாரும் துப்பாக்கியோடு நடமாட முடியாது..! அஜித் தோவால்.

குற்றவாளிகள் அனைவரின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், டெல்லி சாலைகளில் யாரும் கையில் துப்பாக்கியுடன் சுற்ற முடியாது என்று அவர் கூறினார்.

உலக நாடுகளில் இதுவரை கொரோனா படுத்தி இருக்கும் பாடு!!!

கோவிட் – 19 என்று அழைக்கப் படும் கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் மாகாணத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் கண்டுபிடிக்கப் பட்டது.

'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு குறித்த அப்டேட் தெரிவித்த பிரபல நடிகர்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

கலவரத்தை தூண்டியதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்..?! காவல் துறையை துளைத்தெடுத்த நீதிபதி முரளிதர்.

பாஜக தலைவர் இப்படி பேசியது எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று மேத்தா குறிப்பிட்டார். நீதிபதி முரளிதர் எதை செய்வார் என்று மேத்தா பயந்தாரோ அதையே இன்று முரளிதர் சிறப்பாக செய்து முடித்தார்.

டெல்லி கலவரம் ஏற்பட்டது இதனால்தான்: ரஜினியின் சகோதரர் பேட்டி

டெல்லியில் கடந்த மூன்று நாட்களாக கட்டுக்கடங்காத வகையில் வன்முறை, கலவரம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த கலவரத்தில் காவல்துறையினர் உள்பட 20 பேர் பலியாகியுள்ளனர்.