விக்ரமின் 'கோப்ரா' புதிய ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு1

விக்ரம் நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான ‘கோப்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் இந்த படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது

ஆனால் இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததன் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் சற்று முன்னர் வரை படம் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரை இயக்குனர் அஜய்ஞானமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், கேஎஸ் ரவிக்குமார், ஆனந்தராஜ், ரோபோ சங்கர், மியா ஜார்ஜ், மிருணாளினி ரவி உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவில் புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'விருமன்' திரைப்படத்தில் திடீரென இணைந்த இளையராஜா!

கார்த்தி, அதிதிஷங்கர் நடிப்பில், முத்தையா இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான 'விருமன்' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் இறுதிகட்ட புரமோஷன்

விஜய் - ஷாம் ஸ்டண்ட் காட்சிகள்: இணையத்தில் லீக்கான 'வாரிசு' வீடியோ!

தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தற்போது விசாகப்பட்டினத்தில் உள்ள துறைமுகத்தில் படப்பிடிப்பு நடந்து வருவதாக ஏற்கனவே செய்தி

கமல் தயாரிப்பில் உதயநிதி படம்: இயக்குனர் இந்த பிரபலமா?

உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது

'மாவீரன்' படத்தில் நடிக்கும் அதிதிஷங்கருக்கு சம்பளம் இத்தனை லட்சமா?

சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகிவரும் 'மாவீரன்' திரைப்படத்தில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதிஷங்கர் தான் நாயகி என சமீபத்தில்

கார்த்தியின் அடுத்த படத்தை உறுதி செய்த பிரபல இயக்குனர்!

கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள 'விருமன்' திரைப்படம் வரும் வெள்ளியன்று பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும்