அடுத்த படம் 'அயன் 2'? கே.வி.ஆனந்த் விளக்கம்

  • IndiaGlitz, [Friday,July 28 2017]

கடந்த இரண்டு நாட்களாக ஒருசில இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கே.வி.ஆனந்த் இயக்கவுள்ள அடுத்த படத்தில் விக்ரம் நடிக்கவுள்ளதாகவும், இந்த படம் கடந்த 2009ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான 'அயன் 2' படத்தின் இரண்டாம் பாகம் என்றும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த செய்திகளுக்கு கே.வி.ஆனந்த் தற்போது விளக்கம் அளித்துள்ளார். ரசிகர்கள் பல ஆண்டுகளாக 'கோ 2' மற்றும் 'அயன் 2' படம் குறித்து என்னிடம் கேள்வி கேட்டு வருகின்றனர். பொதுவாக எனக்கு இரண்டாம் பாகம் எடுப்பதில் விருப்பமில்லை. இருப்பினும் எனது 'கவண்' படம் 'கோ' படத்தின் இரண்டாம் போல கருதப்பட்டது.

இந்த நிலையில் எனது அடுத்த படம் 'அயன் 2' என்று வெளியான செய்தியில் உண்மையில்லை. எனது அடுத்த படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றேன். இந்த படம் குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாத நிலை உள்ளது. மிக விரைவில் எனது அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளிவரும்' என்று கூறியுள்ளார்.

கே.வி.ஆனந்த் இயக்கவுள்ள அடுத்த படம் 'அயன் 2' இல்லை என்று அவர் மறுத்தாலும், அவருடைய அடுத்த படத்தில் விக்ரம் நடிப்பது குறித்து அவர் எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பாகுபலி படத்துடன் கனெக்சன் ஆனது தளபதியின் 'மெர்சல்'

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே வியாபாரமும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது

சின்ன பிக்பாஸ் ஆன காயத்ரி! கடுப்பில் வெளியேறிய ஜூலி

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களில் ஒருவராகிய காயத்ரி மீது கடந்த சில நாட்களாகவே பார்வையாளர்கள் கடும் கோபத்தில் இருந்தனர்.

'வேலைக்காரன்' இசை வெளியீடு எப்போது? சிவகார்த்திகேயன் தகவல்

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் சமூகவலைத்தளம் மூலம் ரசிகர்களுடன் உரையாடியபோது பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

ஓவியா இன்னும் மாறவே இல்லை: சிவகார்த்திகேயன்

பிக்பாஸ் நிகழ்ச்சியால் தமிழகம் முழுவதும் ஒருசில நாட்களில் பிரபலம் ஆனவர் நடிகை ஓவியா.

அஜித், விஜய், சிம்பு, தனுஷ் குறித்து சிவகார்த்திகேயன்

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களுடன் சமூக இணையதளம் மூலம் உரையாடியபோது, ரசிகர்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்தார்