close
Choose your channels
Kaatrin Mozhi

சியான் விக்ரமின் 'சாமி 2' டிரைலர் விமர்சனம்

Monday, September 10, 2018 • தமிழ் Comments

இயக்குனர் ஹரி படங்கள் என்றாலே அதிலும் போலீஸ் கதையமைப்பு கொண்ட படங்கள் என்றாலே விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. அவர் இயக்கிய 'சிங்கம்' திரைப்படம் மூன்று பாகங்கள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது விக்ரமுடன் மீண்டும் கைகோர்த்து 'சாமி 2' படத்தை இயக்கியுள்ளார்.

ஒரு கம்பீரமான போலீஸ் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அழுத்தமாக 'சாமி' படத்தில் கூறிய இயக்குனர் ஹரியின் 'சாமி 2' திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளிவந்துள்ளது. முதல் பாகத்தில் காண்பித்த அதே ஆக்ரோஷம் சீயான் விக்ரமிடம் பார்க்க முடிகிறது. 'நான் போலீஸ் இல்லை, பொறுக்கி' உள்பட ஒருசில வசனங்களும் இந்த படத்தில் உள்ளது. அதேபோல் ஹரியின் வழக்கமான ஸ்பீட் பாஸ்ட்பார்வெர்ட் காட்சிகள், கார் பல்டி அடிக்கும் காட்சிகள், அதிரடி ஆக்சன்கள் ஆகியவைகள் இந்த டிரைலரில் உள்ளது.

கீர்த்திசுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் என இரண்டு ஹீரோயின்களும் கலர்கலராக வருவது படத்திற்கு ப்ளஸ் திருநெல்வேலிக்கு போக பாஸ்பார்ட் என்ற மொக்கை காமெடியுடன் உள்ள சூரியின் காமெடி இந்த படத்தில் எடுபடுமா? என்பதை படம் வெளியானதும்தான் பார்க்க வேண்டும்

கலர்கலரான ஃபாரின் பாடல் மற்றும் மண்ணின் மணத்துடன் கூடிய வயக்காட்டு புல்வெளி பாடல் கேட்கும் வகையில் உள்ளது. மிரள வைக்கும் பாபிசிம்ஹா வில்லத்தனம், தேவிஸ்ரீ பிரசாத்தின் அட்டகாசமான பின்னணி மற்றும் பாடல்கள், வெங்கடேஷின் ஒளிப்பதிவு ஆகியவை படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. மொத்தத்தில் 'சாமி 2' படத்தின் டிரைலர் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த எதிர்பார்ப்பு படத்திலும் இருக்குமா? என்பதை இந்த படத்தின் திரைவிமர்சனத்தில் பார்ப்போம்